சென்னை : ஜெயலலிதா மரணத்தில் ஆதாரமற்ற சந்தேகம் எழுப்ப வேண்டாம் என மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு கூறினார்.
சென்னையில் அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது: பழைய ரூபாய் செல்லாது என்ற அறிவிப்பு ஏழை மக்களுக்கு நன்மை தரும். கறுப்பு பண ஒழிப்பின் போர் இது. இதில் வெற்றியின் ஆரம்பம் தெரிகிறது. இதன் மூலம் மக்கள் பெறும் பயன் கண்கூடாக பார்க்க முடிகிறது. வங்கி கடன் குறைக்கப்பட்டுள்ளது .
நமது பிரதமர் விரும்புகிறார்:
பிரகாசமான எதிர்காலம் காத்திருக்குது. கறுப்பு பணஒழிப்பு போர் தொடரும். மத்திய அரசு. கறுப்பு பணம் ஊழல் இல்லாத இந்தியா உருவாக வேண்டும் என விரும்புகிறது. இதனையே நமது பிரதமர் விரும்புகிறார். 1971ல் சவான் குழு பரிந்துரை செய்ததை இந்திரா காலத்தில் ஏற்று கொள்ளப்படவில்லை. சிறப்பு கமிட்டி அமைக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது. காங்கிரஸ் ஆட்சியில் எவ்வித நடவடிக்கையும் இல்லை. சுதந்திரத்திற்கு பின்னர் மிக தைரியமாக முடிவு எடுத்தவர் பிரதமர் மோடி. 1998 ல் பினாமி சட்டத்தை ஏன் நடைமுறைப்படுத்தவில்லை ? கறுப்பு பணத்தை ஒழிக்க காங்., நடவடிக்கை எடுத்ததா ?
மொபைல் போன் மூலம் பண பரிவர்த்தனை நடக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறார் மோடி. பீம் திட்டம் துவங்கப்பட்டுள்ளது. ஓ.பி.எஸ்., முதல்வரானதில் மத்திய அரசின் தலையீடு இல்லை. தமிழக அரசின் உள் விவகாரங்களிலும் மத்திய அரசு தலையிடாது. ஓ.பி.எஸ்., செயல்பாடு தற்போது ஏதும் சொல்ல முடியாது. எம்.எல்.ஏ.,க்கள் முடிவின்படி ஓ.பி.எஸ்., முதல்வராகியுள்ளார். மக்களவை துணை சபாநாயகர் அவரது லெட்டர் பேடில் அரசியல் தொடர்பான அறிக்கை வெளியிட்டதை தவிர்த்திருக்க வேண்டும்.
ஜெயலலிதா மரணத்தில் ஏதும் மர்மம் உள்ளதா என்ற நிருபர்கள் கேள்வவிக்கு, ஜெ., மரணத்தில் சந்தேகிப்பது தவறானது. ஜெ., மறைவில் எனக்கு ஏதும் மருத்துவ விஷயத்தை நான் சொல்ல தெரியாது. இந்த மறைவு குறித்து விவாதிக்க தேவையில்லை. ஜெயலலிதா மறைவு இறுதி ஊர்வலத்தில் மக்கள் மிக ஒழுக்கமாக எவ்வித பிரச்னையும் இல்லாமல் அஞ்சலி செலுத்தியதை நான் பாராட்டுகிறேன். இவ்வாறு வெங்கையா கூறினார்.
English summary:
Chennai: Jayalalithaa's death, the Union Minister Venkaiah Naidu told not to raise groundless suspicions.