
இலங்கையில் உள்ள பௌத்தர்கள் இந்தியாவில் உள்ள கயாவிற்கும், கிறிஸ்தவர்கள் ஜெருசலத்திற்கும், இஸ்லாமியர் மக்கா செல்வதற்கும் அந்நாட்டு அரசு வசதிகள் செய்து தருகிறது. அது போல ஜனவரி 2 முதல் 12ஆம் தேதி வரையிலும் சிதம்பரத்தில் நடைபெறவுள்ள திருவாதிரை திருவிழாவில் கலந்து கொள்ள இலங்கையிலுள்ள இந்து பக்தர்கள் சிறப்பு கப்பல் மூலம் குறைந்த செலவில் செல்ல அனுமதிக்க வேண்டும் என வட மாகாணத்தில் உள்ள இயக்கங்கள் வடமாகாண ஆளுநர் ரெஜினால் கூரேவிற்கு கோரிக்கை வைத்தனர்.
இந்தக் கோரிக்கையினை ஏற்று இலங்கை அரசு வெளியுறவுத்துறை மூலம் யாழ்ப்பாணத்திலுள்ள காங்கேசன்துறையிலிருந்து காரைக்காலுக்கு சிறப்பு கப்பல் பயணத்திற்கு ஏற்பாடுகள் துவங்கப்பட்டன. இது குறித்து இலங்கையிலுள்ள இந்திய துணைத் தூதரக அதிகாரி கூறியதாவது, ''இந்திய அரசு சிறப்பு கப்பல் சேவைக்கான கோரிக்கையை ஏற்றுக் கொண்டது. ஆனால் குறுகிய காலத்தில் காரைக்கால் மற்றும் காங்கேசன்துறையில் கப்பல் துறைகள் அமைப்பதில் ஏற்பட்ட தாமதத்தினால் கப்பல் சேவை ரத்து செய்யப்பட்டது. எதிர்வரும் ஆண்டுகளில் சிறப்பு கப்பல் சேவை இயக்கப்படலாம்'' என்றார்.
English summary:
Chidambaram - from Sri Lanka to attend the ceremony organized Betelgeuse Chidambaram specialized shipping service has been canceled.