சென்னை: தமிழக அரசு, ஜல்லிக்கட்டு நடத்த, அவசர சட்டம் கொண்டு வந்து, அதை சட்டசபையில் நிறைவேற்றியும், பிராணிகள் நல ஆர்வலர்கள் மிகவும் பிடிவாதமாக உள்ளனர். ‛ஜல்லிக்கட்டை நடத்த விட மாட்டோம்'என, அவர்கள் வெளிப்படையாகவே அறைகூவல் விடுத்துள்ளனர்.
புனேவை சேர்ந்தவர்:
மகாராஷ்டிரா மாநிலம், புனேயை மையமாக கொண்டு செயல்படுபவர் மனோஜ் ஓஸ்வால். கடந்த, 2010ம் ஆண்டு முதல், 2012ம் ஆண்டு வரை தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடந்த போது, அதை கண்காணிக்க சுப்ரீம் கோர்ட்டால் நியமிக்கப்பட்ட நபர் தான் இவர். இவரும், பிராணிகள் நல ஆர்வலர்கள், 50 பேரும் தற்போது டில்லியில் முகாமிட்டுள்ளனர். தமிழக அரசு கொண்டு வந்துள்ள சட்டத்தை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் பல வழக்குகளை தொடுத்துள்ளனர். தங்கள் நிலை குறித்து, ஆங்கில இணைய தள இதழுக்கு மனோஜ் ஓஸ்வால் அளித்த பேட்டி:
அபராதம் இல்லாத சட்டம்:
கே: தமிழக அரசு கொண்டு வந்துள்ள சட்டம் மற்றும் 2016ல் பிறப்பிக்கபட்ட அறிவிப்பாணையை மத்திய அரசு வாபஸ் பெற்றது என இரண்டையும் எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் போராட போகிறீர்களா?ப: ஜல்லிக்கட்டு நடத்த தமிழக அரசு கொண்டு வந்த சட்டத்தை தான் எதிர்க்க உள்ளோம். எங்கள் தரப்பில் ஏராளமானோர் உள்ளனர்.கே: தமிழக அரசு கொண்டு வந்துள்ள சட்டத்தில் நீங்கள் எதிர்க்கும் அம்சம் என்ன?
ப: விலங்குகளை துன்புறுத்துவர்களுக்கு 50 ரூபாய் அபராதம் விதிக்கும் நடைமுறை ஏற்கனவே உள்ளன. இந்த விஷயம் தமிழக சட்டத்தில் இல்லை. இதனால் விலங்குகளை துன்புறுத்துபவர்களை தண்டிக்க, கோர்ட்டால் முடியாத. அபராதம் இல்லாமல் வந்துள்ள முதல் சட்டம் இது தான். சுப்ரீம் கோர்ட் உத்தரவு நிறைவேற்றப்பட வேண்டும் என்பதில் நாங்கள் தீவிரமாக உள்ளோம். விலங்குகளை, விலங்குகளாக நடத்தும் நடைமுறை அந்த சட்டத்தில் இல்லை என்பது தான் எங்களின் மிகப்பெரிய கவலை. இதில் கட்டுப்பாடு இல்லை; இது, சட்டத்தை புறக்கணித்து செல்லுகிறது. தமிழக அரசின் புதிய சட்டத்தை சுப்ரீம் கோர்ட் ஏற்காது என்று நாங்கள் நம்புகிறோம்.
துன்புறுத்தல் நடக்கிறது:
கே: காளைகள் துன்புறுத்தப்படாமல் ஜல்லிக்கட்டு நடக்க, விதிமுறைகள் கொண்டு வர வேண்டும் என்ற பேச்சு எழுந்துள்ளது. ஜல்லிக்கட்டுக்கு கடுமையான நடைமுறைகள் கொண்டு வந்தால் அதை நீங்கள் ஆதரிப்பீர்களா?
ப: ஒரு சட்டம் என்று இருந்தால், மக்களின் கருத்தை எண்ணாமல் அதை நிறைவேற்ற வேண்டும். போட்டியின் போது காளைகள் துன்புறுத்தப்படுகின்றன என்பதற்காக ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்கவில்லை. போட்டியில் பங்கேற்பதற்கு முன், வாடிவாசலில் அவிழ்த்து விடுவதற்கு முன்பும், போட்டி நடக்கும் மைதானத்தை விட்டு காளைகள் வெளியேறிய பின்பும் காளைகள் துன்புறுத்தபடுவதால் தான், ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்கப்பட்டது.
கே: தமிழகத்தில் நடந்த ஜல்லிக்கட்டு போட்டிகளை நீங்களும், பிரகாஷ் ஷா என்பவரும் கண்காணித்துள்ளீர்கள். அங்கு என்ன நடந்தது என்பதை கூற முடியுமா?
ப: போட்டி நடக்கும் மைதானத்திற்கு கொண்டு வர வேனில் காளைகள் ஏற்றப்படும் போதே, துன்புறுத்தல் துவங்கி விடுகிறது. காளைகளை மிகவும் இறுக்கமாக கயிறுகள் மூலம் கட்டி, அதே நிலையில், 8 மணி நேரத்திற்கு மேல் பயணம் செய்து போட்டி நடக்கும் மைதானத்திற்கு கொண்டு வருகின்றனர். நள்ளிரவு, 1:00 மணி முதல், வாடிவாசலுக்கு பின் காளைகளை வரிசையாக கட்டி வைக்கின்றனர். அதிகாலை, 5:00 மணிக்குள், அனைத்து வரிசைகளிலும் காளைகள் நிறுத்தப்பட்டு விடும். 9 மணி நேரத்திற்கு மேலாக, அதே இடத்தில் காளைகள் நின்றபடி இருக்க வேணடும். காளைகள் கீழே உட்கார கூட முடியாது. காளைகளின் சிறுநீர் மற்றும் சாணம் அகற்றப்படாமல் இருக்கும். அதன் பிறகு, காளையின் வாலை முறுக்கியும், கடித்தும் வாடிவாசல் வழியாக அடித்து விரட்டுவார்கள். காளைக்கு மூர்க்க குணம் ஏற்பட வேண்டும் என்பதற்காக, கூரிய பொருட்களால் குத்தவும் செய்வார்கள். மூக்கணாங்கயிற்றை இழுத்து பிடித்து விட்டு, காளையை துன்புறுத்துவார்கள். வாடிவாசல் வழியாக வெளியேறும் காளைகள் அனைத்தையும் அங்கு காத்திருக்கும் போட்டியாளர்கள் பிடிப்பதில்லை. போட்டி மைதானத்தை விட்டு வெளியேறும் காளைகளை, பார்வையாளர்கள் துன்புறுத்துகின்றனர். ஒரு போட்டியில், பார்வையாளர்கள் காயம் அடைவது இங்கு மட்டும் தான்.
துன்புறுத்தலை விருப்புகின்றனர்:
சுப்ரீம் கோர்ட் வழிமுறைகளின்படி போட்டிகள் நடக்கும் என்றால், ஜல்லிக்கட்டில் எந்த துன்புறுத்தலும் இருக்காது. ஆனால், மக்கள் துன்புறுத்தலை விரும்புகின்றனர். எனவே தான் ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்க கூடாது என்று கூறுகின்றனர்.
ஜல்லிக்கட்டை அனுமதித்தால், நாட்டின் பல பகுதிகளில் புதிய பிரச்னைகள் உருவாகும். கைவிடப்பட்ட பல விழாக்கள், வழிபாடுகளை மீண்டும் நடத்த வேண்டும் என்ற கோரிக்கை எழும். நாக பஞ்சமி என்ற பெயரில், பாம்புகள் வேட்டையாடப்படுகின்றன. இது அராஜகமான விஷயம். எனவே, ஜல்லிக்கட்டுக்கு தடை பெற கடைசி வரை முயற்சிப்போம்.
இவ்வாறு அவர் கூறினார்.
English summary:
Chennai: The Tamil Nadu government to conduct jallikattu, emergency legislation to bring it to pass in the assembly, are very stubborn animal welfare activists. "neither than to hold the gravel, they apparently made the call.