மதுரை: காங்கிரஸ் ஆட்சியில் தான் ஜல்லிக்கட்டுக்கு தடை வந்தது. இதற்கு காங்., கட்சி , மக்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும். என மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் மதுரையில் நிருபர்களிடம் கூறுகையில் : தற்போது அலங்காநல்லூர் போராட்டகளமாக மாறியுள்ளது. மக்களை ஏமாற்றும் அரசியல் கட்சிகள் குறித்து மக்கள் தெரிந்து கொள்வார்கள். ஜல்லிக்கட்டு தடைக்கு காரணமானவர்களை திமுக கண்டிக்காதது ஏன் ? காங்கிரஸ் கூட்டணியில் திமுக இருந்த போது தான் இந்த தவறு நடந்தது. ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு உரிய வேலைகளை செய்யாமல் போராட்டம் நடத்துவதால் என்ன பயன் ?
மக்கள் கேள்வி கேட்பார்கள்:
தமிழ் மக்கள் கோரிக்கை போராட்டம் அல்ல. அரசியல் கட்சிகள் வர வேண்டிய இடம் அலங்காநல்லூர் அல்ல. டில்லியில் தான் இருக்கிறது. பார்லி.,யில் செய்தது என்ன , கோர்ட்டில் செய்தது என்ன என்பது குறித்து மக்கள் கேள்வி கேட்பார்கள் என நான் நம்புகிறேன். காங்கிரஸ் ஆட்சியில் தான் ஜல்லிக்கட்டுக்கு தடை வந்தது. இதற்கு காங்., மக்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும். ஜல்லிக்கட்டு நடத்துவது என்பது தான் எல்லோரது விருப்பம். இது தற்போது கோர்ட்டில் இருக்கிறது. நல்ல தீர்ப்பு வரும்.இவ்வாறு அவர் கூறினார்.
English summary:
Madurai: Congress rule was banned Jallikattu. The Cong., Party, people should apologize to the public. Pon the Union Minister said.