புதுடெல்லி : ஜல்லிக்கட்டு தொடர்பாக தமிழக அரசு பிறப்பித்த அவசரச் சட்டத்தை எதிர்த்து, வழக்குத் தொடரப்பட்டால் தமிழக அரசின் கருத்தைக் கேட்காமல் உத்தரவு எதையும் பிறப்பிக்கக்கூடாது என தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கேவியட் மனு விபரம் :
ஜல்லிக்கட்டு நடத்த வகை செய்யும் விதத்தில் தமிழக கவர்னர் வித்யாசாகர் ராவ் நேற்று அவசரச் சட்டம் ஒன்றை பிறப்பித்தார். இதன் விளைவாக ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்த அவசரச் சட்டத்திற்கு எதிராக யார் மனு தாக்கல் செய்தாலும், உச்சநீதிமன்றம் தமிழக அரசின் கருத்தைக் கேட்டபின்னரே உத்தரவு எதையும் பிறப்பிக்க வேண்டும் எனக்கோரி தமிழக அரசின் சார்பில் உச்சநீதிமன்றத்தில் நேற்று கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தமிழக அரசின் கருத்தைக் கேட்காமல் உச்சநீதிமன்றம் எந்த உத்தரவையும் பிறப்பிக்கக்கூடாது என்றும் மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதனிடையே தமிழகத்தில் நேற்று புதுக்கோட்டை மாவட்டம் ராபூசல் கிராமத்தில் ஜல்லிக்கட்டு நடந்தது. இதனை அமைச்சர் விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார். இதேபோல் மணப்பாறை ,ஈரோடு, ராம்நாடு ஆகிய இடங்களிலும் ஜல்லிக்கட்டு நடந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
English summary:
Jallikattu opposed to the ordinance issued by the government, are prosecuted without asking the opinion of the State Government on behalf of that directive report anything Caveat petition was filed in the Supreme Court.