சென்னை: சென்னை உயர்நீதிமன்றம், உயர்நீதிமன்ற மதுரை கிளை மற்றும் சுப்ரீம் கோர்ட்டில் இன்று, ஜல்லிக்கட்டு தொடர்பான மனுக்கள் பரபரப்பை ஏற்படுத்தின.மதுரையை சேர்ந்த கே.கே.ரமேஷ் என்பவர், சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்துள்ளார். ஜல்லிக்கட்டு உட்பட பொங்கல் பண்டிகையை ஒட்டி நடக்கும் அனைத்து
போட்டிகளையும் அனுமதிக்கும் வகையில், மத்திய அரசு சிறப்பு சட்டம் கொண்டு வர வேண்டும் என அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. இந்த மனு, உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான பெஞ்ச் நாளை விசாரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சுப்ரீம் கோர்ட்டில், ராஜாராம் என்பவர், சென்னை மெரினாவில் போராட்டம் நடத்தி வருபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனு தாக்கல் செய்தார். ஆனால், சுப்ரீம் கோர்ட் அந்த மனுவை விசாரிக்க மறுத்து விட்டது.
சென்னை உயர்நீதிமன்றத்தை அணுகும்படி மனுதாரரை சுப்ரீம் கோர்ட் வலியுறுத்தியது. ஜல்லிக்கட்டு போராட்டக்காரர்களை கைது செய்ய தடைவிதிக்க கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை உயர்நீதிமன்ற மதுரை கிளை தள்ளுபடி செய்தது.
English summary:
Chennai: The Madras High Court, High Court and the Supreme Court today in Madurai branch, caused a stir jallikattu related petitions. K.K.Ramesh of Madurai, who has filed a petition in the Madras High Court. By including the Pongal festival Jallikattu happens all