ஊட்டி: ஜல்லிக்கட்டு நடத்தக்கோரி நீலகிரி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளிலும் நேற்று ஆர்ப்பாட்டம், பேரணி, உண்ணாவிரதம் நடைபெற்றது. ஜல்லிக்கட்டு நடத்தக்கோரி தமிழகம் முழுவதும் கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் பல்ேவறு அமைப்புக்களை சேர்ந்தவர்கள் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். நீலகிரி மாவட்டத்திலும் பல்வேறு பகுதியில் போராட்டங்கள் நடத்தப்பட்டது. ஊட்டியில் ஏடிசி., சுதந்திர திடலில் ஊட்டியில் உள்ள பத்திரிக்கையாளர்கள் சங்கம் சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடந்தது.
இப்பேராடத்திற்கு ஆதரவு தெரிவித்து பல்வேறு அமைப்புகள் அங்கு திரண்டனர், கல்லூரி மாணவர்கள், ஆட்டோ ஓட்டுநர்கள், டேக்சி மற்றும் சுற்றுலா வாகன ஓட்டுநர்கள், பாரம் தூக்கும் தொழிலாளர்கள், அனைத்து இஸ்லாமிய அமைப்புகள், மருந்து கடை உரிமையாளர்கள், மார்க்கெட் வியாபாரிகள் சங்கம், மோட்டார் வாகன உரிமையாளர்கள் சங்கம், புகைப்பட கலைஞர்கள் சங்கம் உட்பட பல்வேறு அமைப்புக்களை சேர்ந்தவர்கள் நேற்று காலை முதல் ஏடிசி., திடலுக்கு வந்த வண்ணம் இருந்தனர்.
மாலை 4 மணியளவில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் திரண்டனர். இவர்கள், தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்த வேண்டும். பீட்டா அமைப்புக்கு தடை விதிக்க வேண்டும். ஜல்லிக்கட்டு நடத்த அவசர சட்டம் இயற்ற வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை முன்னிறுத்தி கோஷங்கள் எழுப்பினர். இப்போராட்டத்தால், ஊட்டி குன்னூர் சாலையில் ஏடிசி., பகுதியில் மக்கள் குவிந்ததால்,அனைத்து வாகனங்களும் மாற்று வழிதடத்தில் இயக்கப்பட்டன. ஜல்லிக்கட்டு போராட்டம் நடத்தக்கோரி ஊட்டியில் நடந்த ஆர்ப்பாட்டத்தின் போது, பீட்டாவை தடை செய்ய கோரி அங்கு கூடியிருந்தவர்கள் கோஷம் எழுப்பினர்.
English summary:
Fed: jallikattu demanding a demonstration yesterday in various parts of the Nilgiris district, rally, held fast. Jallikattu across demanding college students, young people and members of various organizations have staged protests. Protests were held in various part of the Nilgiri district. ATC feeder., On behalf of the Association of independent journalists in the field to feed the hunger strike took place