புதுடில்லி: ஜல்லிக்கட்டு வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு உள்ளதால், தற்போது உதவ இயலாது என பிரதமர் மோடி கூறியுள்ளார்.
தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் டில்லி சென்று பிரதமர் மோடியை சந்தித்தார். ஜல்லிக்கட்டுக்கு அவசர சட்டம் கொண்டு வர வேண்டும் எனவும், வறட்சிக்கு உதவ வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.
கைவிரிப்பு:
இதன் பின்னர் பிரதமர் மோடி கூறுகையில், ஜல்லிக்கட்டு வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் உள்ளதால் தற்போது உதவ இயலாது. ஜல்லிக்கட்டு கலாசார முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை ஒப்புக்கொள்கிறேன். ஜல்லிக்கட்டு தமிழர்களின் உணர்வுடன் ஒன்றிப்போனது என்பதை உணர்ந்துள்ளேன். ஜல்லிக்கட்டு தொடர்பாக தமிழக அரசு எடுக்கும் நடவடிக்கைக்கு மத்திய அரசு ஆதரவு அளிக்கும். ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு அளித்தாலும், இது தொடர்பாக வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் உள்ளது. இதனால், ஜல்லிக்கட்டு விவகாரத்தில் உடனடியாக ஏதும் செய்ய முடியாது.
மத்திய குழு:
வறட்சியை சமாளிக்க மாநில அரசுக்கு தேவையான உதவிகளை மத்திய அரசு செய்யும். விரைவில் மத்திய குழு ஒன்று தமிழகம் வரும் எனக்கூறியுள்ளார்.
English summary:
NEW DELHI: The Supreme Court case in jallikattu case because it would not help now, Modi said. O pannerselvam met Delhi Chief Minister Modi to visit. Jallikattu will have to come up with emergency legislation, insisting that aid to drought.