அலங்காநல்லூர்: ஜல்லிக்கட்டை வலியுறுத்தி போராட்டம் நடத்தியவர்கள் கைது செய்யப்பட்டதற்கு கிராம மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். சேலம், சென்னை, பகுதிகளிலும் ஜல்லிக்கட்டை வலியுறுத்தி போராட்டம் நடந்தது.
தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டை நடத்தக்கோரி மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் 21 மணி நேரத்துக்கும் மேலாக போராட்டம் நடத்தி வந்த இளைஞர்களை போலீசார் கைது செய்து, வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தினர். கைது செய்யப்பட்டவர்கள், வாடிப்பட்டி, அலங்காநல்லூரில் உள்ள திருமண மண்டபங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். போராட்டம் நடத்தியவர்கள் சமூக வலைதளங்கள் மூலம் ஒன்று சேர்ந்தவர்கள்.
மறியல்:
இந்நிலையில், போராட்டகாரர்கள் கைது செய்யப்பட்டதற்கு அலங்காநல்லூர் மற்றும் வாடிப்பட்டி பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அவர்கள் பேரணியாக சென்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். வாடிப்பட்டி அருகே சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அலங்காநல்லூரில் உள்ள கேட்கடை பகுதியில் பொது மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் கைதானவர்களை விடுதலை செய்ய வேண்டும் என வலியுறுத்தினர். இந்த போராட்டத்தில் சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். தி.மு.க., எம்.எல்.ஏ., மூர்த்தி மற்றொரு எம்.எல்.ஏ., மாணிக்கம் ஆகியோரும் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டனர். முன்னதாக மாணிக்கம் மீது போராட்டக்காரர்கள் பாட்டீலை வீசினர்.
தொடர்ந்து போராட்டம் நடத்தி வரும் மக்களுக்கு ஆதரவாக இயக்குநர் அமீர் உள்ளிட்டோர் சம்பவ இடத்திற்கு வந்துள்ளனர். சம்பவ இடத்திற்கு சில அரசியல் கட்சியினர் வருவதற்கு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால், அங்கு தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அவர்கள் வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
தோல்வி:
போராட்டம் நடத்தியவர்களுடன் மாவட்ட எஸ்.பி., விஜயேந்திர பிதரி பேச்சுவார்த்தை நடத்தினர். கைது செய்யப்பட்ட போராட்டக்காரர்கள் விடுதலை செய்யப்படுவார். அமைதியான போராட்டத்திற்கு போலீசார் ஒத்துழைப்பு அளித்து வருகிறது எனக்கூறினார். இருப்பினும் பொது மக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கைதானவர்களில் 32 பேரை விடுதலை செய்ய எஸ்.பி., ஒப்புக்கொண்டார். இருப்பினும் போராட்டம்நடக்கிறது. போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு ஆதரவாக மதுரை மாவட்டத்தின் பல இடங்களில் சாலை மறியல் உள்ளிட்ட பல போராட்டங்கள் நடந்து வருகிறது.
சென்னையில் எதிர்ப்பு:
இதேபோல், போராட்டம் நடத்தியவர்கள் கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், ஜல்லிக்கட்டை நடத்த வலியுறுத்தியும் சென்னை மெரினா கடற்கரையில் போராட்டம் நடந்தது. இதில், ஆயிரகணக்கான இளைஞர்கள் பேஸ்புக் மூலம் ஒன்று சேர்ந்தவர்கள் ஆவார்கள். தமிழக கலாசாரத்தை அழிக்க முயற்சி நடப்பதாக அவர்கள் குற்றம்சாட்டினர். சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையம் பகுதியிலும் போராட்டம் நடந்தது. நடிகரும், இசையமைப்பாளருமான ஜி.வி.பிரகாஷ். சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையத்தில் நடந்த போராட்டத்தில் கலந்து கொண்டார். ஈரோடு உள்ளிட்ட பல மாவட்டங்களில் போராட்டம் நடந்தது.
English Summary:
Alanganallur: gravel voiced strong opposition urging villagers protested the arrest. Salem, Chennai, insisting the battle took place in the gravel.