புதுடில்லி : ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி கேட்டு, பிரதமர் மோடியை, அ.தி.மு.க., - எம்.பி.,க்கள், இன்று டில்லியில் சந்தித்து வலியுறுத்த உள்ளனர்.
இரு வழிகள்:
காட்சிப்படுத்தும் விலங்குகள் பட்டியலில் இருந்து, காளைகள் இன்னும் நீக்கப்படாததால், இந்த ஆண்டும் ஜல்லிக்கட்டு நடத்துவதில் சிரமம் ஏற்பட்டு உள்ளது. தற்போது, ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு, இரு வழிகள் தான் உள்ளன.
சாத்தியம்:
முதலாவதாக, காளைகளை, காட்சிப் பட்டியலில் இருந்து நீக்கி, மத்திய அரசு, அவசர சட்டம் பிறப்பிக்க வேண்டும். இரண்டாவது, தமிழக அரசு, சட்டசபையில் அவசர கூட்டம் நடத்தி, ஜல்லிக்கட்டு தொடர்பான சட்டத்தை நிறைவேற்ற வேண்டும்; அதற்கு, ஜனாதிபதி ஒப்புதல் தரவேண்டும். இதில், முதலாவது வழியே சாத்தியமானது. மத்திய அரசு, அவசர சட்டம் இயற்றினால் போதும்; ஜல்லிக்கட்டு நடத்தி விடலாம்.
மோடியை சந்திக்க திட்டம்?
இதற்கிடையில், பிரதமர் நரேந்திர மோடியை, அ.தி.மு.க., - எம்.பி.,க்கள், டில்லியில், இன்று(ஜன.,11) காலை, 10:00 மணி அளவில் சந்தித்து, ஜல்லிக்கட்டு தொடர்பாக, அவசர சட்டம் பிறப்பிக்க வலியுறுத்த உள்ள, தகவல் வெளியாகி உள்ளது. அதற்காக, அனைத்து, எம்.பி.,க்களும், இன்று காலை, 9:00 மணிக்குள், பார்லிமென்டில் உள்ள, அ.தி.மு.க., அலுவலகத்தில் ஆஜராகும்படி தகவல் அனுப்பப்பட்டுள்ளது.
English Summary:
New Delhi, asking for permission to conduct jallikattu, Modi, Digg - MPs, met today in New Delhi are also approaching.