புதுடில்லி: ஜல்லிக்கட்டு நடத்த மத்திய அரசு, சுப்ரீம் கோர்ட் உத்தரவிற்காக காத்திருக்க வேண்டிய அவசியமில்லை. பிரச்னையை தீர்க்க அவசர சட்டம் கொண்டு வரலாம் என சுப்ரீம் கோர்ட் முன்னாள் நீதிபதி மார்கண்டேயே கட்ஜூ தெரிவித்துள்ளார்.
முன்னுதாரணம் உள்ளது:
இது தொடர்பாக அவர் கூறியதாவது: தற்போது நடக்கும் சூழ்நிலைகளை பார்க்கும் போது, ஜல்லிக்கட்டு விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட் தீர்ப்புக்காக மத்திய அரசு காத்திருப்பது போல் தோன்றுகிறது. வழக்கு நிலுவையில் உள்ளதால், அவசர சட்டம் கொண்டு வர தயங்குவது தவறானது.
வழக்கு நிலுவையில் இருக்கும் போது, பல முறை சட்டங்கள் மாற்றப்பட்டுள்ளது. உதாரணமாக, தேர்தல் தொடர்பான வழக்கு கோர்ட்டில் இருந்த போது தனக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட போது முன்னாள் பிரதமர் இந்திரா சுப்ரீம் கோர்ட்டிற்கு சென்றார். வழக்கு நிலுவையில் உள்ள போதே, பார்லிமென்டில் மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் திருத்தப்பட்டது. பார்லிமென்ட் அரசியல் சட்டத்தில் திருத்தம் செய்தது.
தற்போது பிரச்னையை தீர்க்க, பிரதமர் பரிந்துரை பேரில், ஜனாதிபதி அவசர சட்டம் கொண்டு வர வேண்டும். அவசர சட்டம் என்பது, பார்லிமென்ட் இயற்றும் சட்டத்தை போன்றது. காளைகளை துன்புறுத்துவதை தடுக்க அவசர சட்டத்தில் கட்டுப்பாடு விதிக்கலாம்.
போராட்டம் தவறு:
மாணவர்கள் போராட்டம் புத்திசாலித்தனம் அல்ல. மெரினா கடற்கரையில் மாணவர்கள் போராட்டம் நடத்துவதால் என்ன பயன் கிடைக்கப்போகிறது. முதல்வர், எம்.பி., எம்.எல்.ஏ.,க்களை முற்றுகையிட்டு அமைதியாக போராட்டம் நடத்த வேண்டும். தங்களது தலைவர்களை டில்லி செல்ல அவர்களை கட்டாயமாக்க வேண்டும். ஜல்லிக்கட்டு நடத்தப்பட வேண்டும். அதேநேரத்தில் பீட்டா அமைப்பும் செயல்பட அனுமதிக்க வேண்டும் எனக்கூறியுள்ளார்.
English summary:
New Delhi: The central government jallikattu, the Supreme Court does not have to wait for orders. Former Justice of the Supreme Court to resolve the issue can be brought ordinance markandeya katju, said.