திருநெல்வேலி, ஜல்லிக்கட்டு நடத்த மத்திய அரசு அனுமதியளிக்காததால் சாகித்ய அகாடமி வழங்கிய யுவபுரஸ்கார் விருதினை மத்திய அரசிடம் எழுத்தாளர் லஷ்மி சரவணகுமார் திருப்பியளித்தார்.
முகநூலில் தெரிவித்தார்:
இளம் எழுத்தாளர் லஷ்மி சரவணகுமார், திருமங்கலத்தை சேர்ந்தவர். திரைப்பட இயக்குநராகவும் பணியாற்றிவருகிறார். படைப்புலகத்தில் இளைஞர்களை ஊக்கப்படுத்துவதற்காக சாகித்யஅகாடமி "யுவபுரஸ்கார்' என்னும் இளையோர் விருதினை வழங்கிவருகிறது. தமிழில் 2016ம் ஆண்டுக்கான யுவபுரஸ்கார் விருது, கானகன் நாவலை படைத்த லஷ்மி சரவணகுமாருக்கு வழங்கப்பட்டது. பளியர்களின் வாழ்வியல் குறித்த படைப்பு. தமிழகம் முழுவதும் நடந்துவரும் தமிழ்பண்பாட்டை காக்கும் போராட்டத்தின் ஒரு அங்கமாக ஜல்லிக்கட்டை நடத்த அனுமதிக்கவேண்டும். பீட்டா அமைப்பை தடை செய்யவேண்டும் என கோரிக்கை வைத்துள்ள லஷ்மி சரவணகுமார், இதற்கு ஆதரவான பதிலை மத்திய அரசு அறிவிக்காவிட்டால் இன்று 20ம் தேதி சென்னையில் உள்ள சாகித்யஅகாடமி அலுவலகத்தில் தமது விருதினை திரும்ப அளிக்க உள்ளதாக முகநூலில் தெரிவித்திருந்தார்.
ஆனால் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான பதிலை அளிக்காததால், தனக்கு வழங்கப்பட்ட விருதை, சென்னையில் உள்ள சாகித்ய அகாடமியில் எழுத்தாளர் லஷ்மி சரவணகுமார் திருப்பி கொடுத்தார்.
English summary:
Tirunelveli, jallikattu not response from the central government provided by the Sahitya Academy Award in yuvapuraskar writer Lakshmi Saravanakumar repaid to the federal government.