ஜல்லிக்கட்டு விவகாரம் திடீரென பெரிதாகி, மற்றப் பிரச்னைகள் அனைத்தும் மறைந்து போயிருக்கின்றன. குறிப்பாக பெரும் பரபரப்பாக பேசப்பட்டு வந்த சசிகலா பறறிய பரபரப்பு தற்போது முழ்கடிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து, அவருக்கு நெருக்கமானவர்கள் கூறியதாவது:
ஜெயலலிதா மறைவுக்குப் பின், தனக்கு இணக்கமான ஒருவரை முதல்வராக்க வேண்டும் என, சசிகலாவும் அவரது குடும்பத்தினரும் முடிந்த வரை பாடுபட்டனர். ஆனால், அது நடக்கவில்லை. பா.ஜ., மற்றும் மோடியின் விருப்பபடி, பன்னீர்செல்வம், தமிழகத்தின் முதல்வராக மூன்றாவது முறையாக பதவி ஏற்றார். சரி பன்னீர்செல்வம், நம் பேச்சைக் கேட்டு விசுவாசமாக இருப்பார். அவரை டீல் செய்வது எளிது என, நம்பிக் கொண்டிருந்தனர், சசிகலா தரப்பினர்.
பன்னீரின் தன்னிச்சையான செயல்பாடு:
ஆனால், நடந்ததே வேறு. சசிகலா கும்பத்திற்கு ஆதி முதல் விசுவாசியாக இருந்து செயல்பட்டுக் கொண்டிருக்கும் பன்னீர்செல்வம், தற்போது முதல்வராக பதவி ஏற்றுக் கொண்டது முதல், தன்னிச்சையாக செயல்படத் துவங்கி விட்டார். மத்திய பா.ஜ., அரசின் எண்ணப்படியே, தமிழகத்தில் ஆட்சி பரிபாலனம் செய்து கொண்டிருக்கிறார். இதனால், அவரை எப்படியாவது பதவியில் இருந்து இறக்கிவிட்டு, அந்தப் பொறுப்பில் தன்னை நியமித்துக் கொள்ள வேண்டும் என்று, சசிகலா விரும்பினார்.
இதற்காக, பலரையும் விட்டு, பன்னீர்செல்வத்தை பதவி விலகச் சொல்லி, அறிக்கை மற்றும் பேட்டிகள் கொடுத்து பார்த்தனர். ஆனால், அசகாய சூரனான பன்னீர்செல்வம், எதைப் பற்றியும் கவலைப்படாமல், தன்னுடைய பாணியில், அமைதியாக பணியாற்றிக் கொண்டிருக்கிறார்.
மெரினாவில் கூடிய இளைஞர்கள்:
இந்நிலையில், இந்தாண்டு பொங்கல் நாளில், ஜல்லிக்கட்டு நடத்த முடியாத அளவுக்கு உச்ச நீதிமன்றம் கடும் உத்தரவுகளைப் போட்டு விட, தென் மாவட்ட மக்கள் மத்தியில் கொந்தளிப்பான சூழ்நிலை ஏற்பட்டது. இளைஞர்கள், உச்ச நீதிமன்றம்; மத்திய அரசுக்கு எதிராக கொந்தளிக்க ஆரம்பித்தனர். தன்னிச்சையாக, மெரினாவில் கூடி நியாயம் கேட்போம் என, சமூக வலைதளங்கள் மூலம் அழைப்பு விடுக்க, தமிழகத்தின் மொத்த இளைய சமுதாயமும், மெரினாவில் கூடி, ஜல்லிக்கட்டை நடத்த வலியுறுத்தி பல கட்ட போராட்டங்களை நடத்தினர்.
விளைவு - தமிழக அரசுக்கு, இந்த பிரச்னையை முடித்தாக வேண்டிய பெரும் நெருக்கடி ஏற்பட்டது. இனியும் சும்மா இருக்க முடியாது என, பிரதமரை சந்திப்பதற்காக, டில்லிக்கு விரைந்தார் முதல்வர் பன்னீர்செல்வம்.
அவசரசட்டம்:
அங்கு பேசி, உடனே, தமிழக அரசு சார்பில், ஜல்லிக்கட்டை நடத்துவதற்கான அவசர சட்ட முன்வடிவை தயாரித்து, அதை ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு அனுப்பி, பின், கவர்னர் பரிந்துரைக்கு அனுப்பி என, ஏகப்பட்ட நடைமுறைகளை விறுவிறுவென செய்து முடித்தார் பன்னீர்செல்வம்.
இந்தப் பணிகளெல்லாம், பிரதமர் மோடியின் ஆலோசனையின் படியே நடப்பதால், இந்தாண்டு, சற்று தாமதமாக ஜல்லிக்கட்டு தடையின்றி நடக்க ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.
இந்த நிகழ்வுகளெல்லாம் மிக மிக பரபரப்பாக இருக்கிறது. நொடிக்கொரு முறை, ஜல்லிக்கட்டுத் தொடர்பாக, ஒட்டுமொத்த சமூகமும் அப்டேட் கேட்டுக் கொண்டிருக்கிறது. இதனால், யாராலும் மற்றப் பிரச்னைகள் மீது கவனம் செலுத்த முடியவில்லை.
இதைத்தான் எதிர்பார்த்தனர்:
இதுதான், சசிகலாவுக்கும் அவரது தரப்பினருக்கும் மிகச் சிறந்ததாக அமைந்து விட்டது. சசிகலாவுக்கு எதிராக அரசியல் களத்தில் இறங்கும் துடிப்பில் இருக்கும் தீபாவைத் தேடி, ஆயிரக்கணக்கில், அவரது இல்லம் தேடி வந்திருந்த கூட்டம், மெல்ல மெல்லா கரைந்து வருகிறது. ஜல்லிக்கட்டு விவகாரம் முடிவுக்கு வரட்டும் என, பலரும் அமைதியாகி உள்ளனர்.
இதைத்தான் நடராஜன் ரொம்பவே எதிர்பாத்துக் காத்திருந்தார். சசிகலாவை பற்றிய இமேஜை சரிக்கும் வேலையில் பலர் ஈடுபட்டுக் கொண்டிருக்க, அவர்களை வேறொரு பக்கம் கவனத்தை திருப்பி விட வேண்டும் என்றால், இப்படி ஏதாவது நடந்தாக வேண்டும். அது வசமாக; தன்னிச்சையாக நடந்துவிட்டது.
கடந்த பத்து நாட்களாக, ஜல்லிக்கட்டுவைத்தாண்டி, எந்த ஊடகமும் பெரிதாக செய்தி வெளியிடவில்லை. இவ்வாறு, அவர்கள் கூறினர்.
English summary:
Jallikattu affair suddenly becomes greater than all other problems have gone disappearing. Sasikala had spoken with great fanfare, especially now tabloid sunk sensation.