பெரம்பலூர்: ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக பெரம்பலூரில் இரவுபகலாக காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் நேற்று உணர்வைப் பறிக்கும் பீட்டாவின் செயலைக் கண்டித்து உயிரையும் தருவதாக கழுத்தில் தூக்குக்கயிறு மாட்டிக்கொண்டு நூதனப்போராட்டம். பெரம்பலூர் புதுபஸ்டாண்டில் இளைஞர்கள் 30க் கும் மேற்பட்டோர், ஜல்லிக்கட்டுமீதான தடையை நீக்கும்வரை இரவு பகல் தொடர் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனையொட்டி நேற்று முன் தினம் இரவு 8மணியளவில் புதுபஸ்டாண்டு அம்மா உணவகம் அருகே பந்தல் போட்டு, அங்கு பீட்டா பெயரெழுதி இறந்ததாக மாலையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். பிறகு அங்கேயே படுத்துக்கொண்டு ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்கும்வரை இரவு பகலாகக் காத்திருப்புப் போராட்டத்தைத் தொடர்ந்து நடத்தி வருகின்றனர்.
நேற்று முன்தினம் பீட்டா என எழுதப்பட்ட ஒருவர் கழுத்தில் மாலையுடன் வெள்ளைத் துணியைச்சுற்றி பிணம் போல் படுக்க வைத்து அவரைச்சுற்றி இளைஞர்கள் ஒப்பாரிவைத்து அழுதனர். பின்னர் மாலையில் நாயிடம் மனுகொடுத்து நூதன போராட்டம் நடத்தினர். இந்நிலையில் நேற்று அதே அமைப்பினர் தமிழர்களின் உணர்வைப் பறிக்கும் பீட்டாவில் செயலைக் கண்டித்து, தங்கள் உயிரையும் தருவதாக தூக்குக் கயிறு மாட்டிக் கொண்டு நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து அதே இடத்தில் 3 வது நாளாகக் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.