புதுடில்லி : ஜல்லிக்கட்டு நடத்த மத்திய அரசு தயாராக உள்ளது. அதே சமயம் சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவிற்காக காத்திருக்கிறோம் என மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் அனில் மாதவ் தவே தெரிவித்துள்ளார்.
மத்திய அமைச்சர் உறுதி :
ஜல்லிக்கட்டுக்கு அனுமதி அளிக்க வேண்டும் என வலியுறுத்தி லோக்சபா துணை சபாநாயகர் தம்பிதுரை தலைமையில் அதிமுக எம்.பி.,க்கள் இன்று மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் அனில் மாதவ் தவேவை சந்தித்து கோரிக்கை வைத்தனர். அதிமுக எம்.பி.,க்களை சந்தித்த பிறகு செய்தியாளர்கள் முன்னிலையில் பேசிய அனில் மாதவ் தவே, ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி கோரி சென்னையில் இளைஞர்கள் நடத்திய போராட்டத்தை அறிவேன். ஜல்லிக்கட்டு தொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் உள்ளதால் தீர்ப்புக்காக காத்திருக்கிறோம். தமிழர்களின் கலாச்சார உணர்வுகளுக்கு உரிய மரியாதை அளிக்கிறோம். ஜல்லிக்கட்டு நடத்த மத்திய அரசு தயாராக உள்ளது. சுப்ரீம் கோர்ட் உத்தரவு வந்த பிறகு முடிவு செய்யப்படும்.
அதிமுக எம்.பி.,க்கள் வலியுறுத்தல் :
ஜல்லிக்கட்டு நடத்துவது தொடர்பாக அவசர சட்டம் கொண்டு வர அதிமுக எம்.பி.,க்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஒரு வாரத்திற்குள் நடத்த அனுமதி அளிக்க வேண்டும் என கேட்டுள்ளனர். அவசர சட்டம் கொண்டு வருவது தொடர்பாக பிரதமர் மோடியுடன் பேசிய பிறகு, துறை சார்ந்த அதிகாரிகளுடனும், அமைச்சர்களுடனும் விவாதிக்கப்படும். ஜல்லிக்கட்டு நடத்த சாத்தியக்கூறுகள் உள்ளதா என்பது குறித்து இன்று பிரதமருடன் ஆலோசிக்கப்படும். விலங்குகளிடம் கருணை காட்டுவதை நம் கலாச்சாரத்திலிருந்து கற்றுக்கொண்டுள்ளோம். சட்டங்கள் மூலமாக அல்ல. உச்சநீதிமன்றம் நல்ல தீர்ப்பை வழங்கும் என்று நம்பிக்கை இருக்கிறது. தீர்ப்பு வரும் வரை நாம் காத்திருக்க வேண்டும். அவசர சட்டம் வேண்டுமா இல்லையா என்பது முக்கியம் இல்லை. ஜல்லிக்கட்டு நடத்த வேண்டும் என்பது தான் முக்கியம்.என தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக எம்.பி., தம்பிதுரை, ஜல்லிக்கட்டு நடத்துவதன் மூலம் தமிழர்களின் கலாச்சாரம் தொடரும். ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி அளித்தால் இளைஞர்களும், தமிழக மக்களும் மகிழ்வார்கள் என்றார்.
English Summary:
NEW DELHI: The government is ready to hold jallikattu. While waiting for the Supreme Court's orders, Federal Environment Minister Anil Madhav Dave said.