சென்னை: ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான அவசர சட்டம் பிரகடனம் செய்யப்பட்டது.
தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்த வலியுறுத்தி மாநிலம் முழுவதும் போராட்டம் நடந்து வருகிறது. ஜல்லிக்கட்டு நடத்த ஏதுவாக, பிராணிகள் வதை தடுப்பு சட்டத்தில், மாநில அளவில் திருத்தம் செய்யும் வகையில், தமிழக அரசு, அவசர சட்டம் கொண்டு வந்தது.
மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சகம், சட்டத்துறை அமைச்சகம், உள்துறை அமைச்சகத்தின் பரிசீலனைக்கு பிறகு இந்த சட்டத்திற்கு ஜனாதிபதி ஒப்புதல் அளித்தார். கவர்னர் வித்தியாசாகர் ராவ் இன்று கையெழுத்திடுவார். இன்று மாலை அவசர சட்டம் பிரகடனம் செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது . இதன் மூலம் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான தடை நீங்கியுள்ளது. இதனால் நாளை தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் ஜல்லிக்கட்டு நடக்கும் . மதுரையில் ஜல்லிக்கட்டுக்கு புகழ் பெற்ற அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரத்தில் தமிழக முதல்வர் ஓ.பி.எஸ்., மற்றும் அமைச்சர்கள் துவக்கி வைப்பார்கள் என தெரிகிறது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது.
English Summary:
Chennai: The emergency law was declared to hold jallikattu. The struggle has been going on throughout the state of stress in the state to hold jallikattu.