சென்னை, ஜல்லிக்கட்டுக்குத் தடை விதிக்கக் காரணமான காங்கிரஸம், அதற்குத் துணைபோன திமுகவும் போராட்டம் நடத்துவது வேடிக்கையாக உள்ளது. அவர்கள் தமிழக மக்களிடம் மன்னிப்புக்கோரவேண்டும் என மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.
மதுரையில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: ஜல்லிக்கட்டுக்காக மத்திய அரசு சட்டரீதியாக நடவடிக்கை எடுத்துவருகிறது. ஆகவே ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான போராட்டக் களம் அலங்காநல்லூர் அல்ல. உச்சநீதிமன்றத்தில் ஜல்லிக்கட்டுக்கு அனுமதி பெறுவதற்கான உதவிகளைச் செய்து போராடுவதுதான் உண்மையான போராட்டம். இதையே மக்களும் விரும்புகின்றனர். கடந்த 2011 ஆம் ஆண்டில் ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்கும் வகையில் காளையை பட்டியல் இனத்தில் சேர்த்தது அப்போதைய மத்திய காங்கிரஸ் அரசு. அதற்குத் துணைபோனது திமுக. ஆகவே இருகட்சிகளும் ஜல்லிக்கட்டு தடைக்கு காரணமாக இருóதுவிட்டு தற்போது போராட்டம் நடத்துவது வேடிக்கையாக உள்ளது.மத்திய காங்கிரஸ் அரசில் சுற்றுச்சூழல் அமைச்சராக ஜெயந்திநடராஜனே இருந்தார். அப்போதே ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தால், நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டிருக்காது.
ஜல்லிக்கட்டு தடைக்கு காரணமான காங்கிரûஸ தமிழக மக்களிடம் மன்னிப்புக்கோர திமுக வலியுறுத்தவேண்டும் என ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் விரும்புகின்றனர். தற்போது ஜல்லிக்கட்டுக்கு அவசரச் சட்டம் தேவை என கூறும் திமுக அதுகுறித்து மாநிலங்களவை உறுப்பினர்கள் மூலம் குரல் எழுப்பாதது ஏன்?தமிழக முதன்மைச் செயலர் ராமமோகனராவ் வீட்டில் நடந்த வருமானவரிச்சோதனையின் அடுத்தகட்ட நடவடிக்கை சட்டரீதியாக நடைபெற்றுவருகிறது.இலங்கையில் தமிழக மீனவர் குறித்த பேச்சுவார்த்தை சுமூகமாக நடந்துள்ளது. பொங்கல் பண்டிகைக்கு இலங்கைச் சிறையில் உள்ள தமிழக மீனவர்களையும், படகுகளையும் அந்நாட்டரசு விடுவிக்கவேண்டும். விவசாயிகள் தற்கொலை குறித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்களுடன் விரைவில் பேசி நடவடிக்கை எடுக்கப்படும். மத்திய அரசு விவசாயிகளுக்கு எப்போதும் உதவியாகவே இருக்கும்.மக்களவை துணைச் சபாநாயகர் தம்பிதுரை கட்சி சார்ந்த அறிக்கைக்கு தனது லெட்டர்பேடை பயன்படுத்தியதை தவிர்த்திருக்கலாம். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இறப்பு குறித்து அறிக்கை வெளியிடுவது தமிழக அரசே முடிவுசெய்யும். நீதிபதியின் தனிப்பட்ட கருத்துக்கு பதில் கூறவிரும்பவில்லை என்றார். பேட்டியின்போது பாஜக மாநிலத்துணைத் தலைவர் சுரேந்திரன், செயலர் பேராசிரியர் ரா.ஸ்ரீநிவாசன், மதுரை மாநகர் மாவட்டத்தலைவர் சசிராமன் ஆகியோர் உடனிருந்தனர்.
English Summary:
jallikkattu ban caused the Congress and the DMK had collaborated in its struggle is fun. They told the people that need say sorry pon Minister said.