கந்தகார் : ஆப்கனில் உள்ள கந்தகாரில் நடந்த குண்டு வெடிப்பில் 11 பேர் பலியாயினர்; 16 பேர் படுகாயமடைந்தனர். இக்குண்டு வெடிப்பில் யு.ஏ.இ., தூதர் காயமடைந்துள்ளார்.
குண்டுவெடிப்பு:
ஆப்கானிஸ்தான் நாட்டில் கந்தகார் நகரில் கவர்னர் வீட்டருகில் பயங்கர குண்டு வெடிப்பு நிகழ்த்தப்பட்டது. ஐக்கிய அரபு எமிரேட்சின் தூதர் ஜூமா முகமது அப்துல்லா அல் கபி உள்ளிட்டவர்கள் கவர்னர் வீட்டிற்கு வந்தபோது குண்டு வெடித்தது. இச்சம்பவத்தில் 11 பேர் பலியானதாகவும், 16 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. குண்டுவெடிப்பில் யு.ஏ.இ., தூதர் அல் கபி காயமடைந்துள்ளார் என யு.ஏ.இ., வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இரட்டை தாக்குதல்:
முன்னதாக ஆப்கன் தலைநகர் காபூலில், தலிபான் பயங்கரவாதிகள் நிகழ்த்திய இரட்டை குண்டுவெடிப்பில் 38 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 72 பேர் படுகாயம் அடைந்ததனர். காபூல் தாக்குதல் நடந்த அடுத்த சில மணி நேரங்களில் கந்தகாரில் குண்டுவெடிப்பு நிகழ்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
English summary:
Kandahar, Afghanistan, 11 people were killed in a bomb explosion in Kandahar; 16 people were injured. UAI bomb blast, injured diplomat.