ஸ்ரீநகர்: ஜம்மு - காஷ்மீரில் வெவ்வேறு இடங்களில் ஏற்பட்ட தொடர் பனிச்சரிவுகளில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 20 ஆக உயர்ந்தது.
பலி 20 ஆக உயர்வு:
ஜம்மு - ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் பல இடங்களில் பனிச்சரிவு மற்றும் நிலநடுக்கம் ஏற்பட்டது. குரேஷ் செக்டார் பகுதியில் புதன்கிழமை ஏற்பட்ட பனிச்சரிவில் ராணுவ முகாம் கடுமையான பாதிப்புக்கு உள்ளானது. அப்பகுதியிலிருந்து 4 ராணுவ வீரர்களின் உடல் இன்று மீட்கப்பட்டது. இதையடுத்து, பனிச்சரிவில் சிக்கி பலியான ராணுவ வீரர்களின் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்தது. கடந்த, 4 நாட்களில் மட்டும் 20 பேர் பலியாகி உள்ளனர்.
அபாய எச்சரிக்கை:
பனிமூடிய காஷ்மீர் பள்ளதாக்கின் மலைபாங்கான பகுதிகளில் புதிய பனிச்சரிவுகள் ஏற்பட வாய்ப்பு இருப்பதால் கடும் அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
முன்னதாக, பனிச்சரிவால் வீட்டில் இருந்து வெளியேற முடியாமல் தவித்த கர்பிணிகள் இருவரை போலீசார் மீட்டு அனந்த்நாக் மருத்துவனையில் அனுமதித்தனர்.
English Summary:
Srinagar: Jammu and Kashmir - a series of different places, the number of victims trapped in avalanches rose to 20.