புதுடில்லி:நீதிமன்ற தீர்ப்பை விமர்சித்து, கருத்து வெளியிட்ட சுப்ரீம் கோர்ட் முன்னாள் நீதிபதி, மார்க்கண்டேய கட்ஜு, தன் செயலுக்கு வருத்தம் தெரிவித்து, மன்னிப்பு கேட்டதை அடுத்து, அவருக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு முடிவுக்கு வந்தது.
மார்க்கண்டேய கட்ஜு கருத்து:
கேரளாவை சேர்ந்த இளம் பெண், 2013ல், கொலை செய்யப்பட்ட வழக்கில், குற்றவாளிக்கு விதிக்கப்பட்ட தண்டனை குறித்து, சுப்ரீம் கோர்ட் முன்னாள் நீதிபதி, மார்க்கண்டேய கட்ஜு கருத்து தெரிவித்திருந்தார். நீதிபதிகளின் தீர்ப்பை விமர்சித்து, சமூக வலைதளங்களில் அவர் வெளியிட்ட கருத்துப் பதிவு, பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதையடுத்து, கட்ஜுக்கு எதிராக, நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. தன் கருத்து குறித்து, விளக்கம் அளிக்கும்படி, கட்ஜுக்கு, சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ் அனுப்பியிருந்தது.
இந்த வழக்கு, சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள், ரஞ்ஜன் கோகோய், யு.யு.லலித் தலைமையிலான அமர்வு முன், நேற்று, விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதிகளின் தீர்ப்பு குறித்த விமர்சனத்திற்கு, பகிரங்க மன்னிப்பு கேட்பதாக, கட்ஜு தரப்பில் கூறப்பட்டது.
பகிரங்க மன்னிப்பு:
மேலும், நீதிமன்ற நடவடிக்கைகளை மதிப்பதாகவும், நீதிபதிகளின் தீர்ப்பை விமர்சித்ததற்கு மிகவும் வருந்துவதாகவும் கட்ஜூ தரப்பில் எடுத்துரைக்கப்பட்டது. அதை ஏற்ற நீதிபதிகள், அவர் மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு முடிவுக்கு வந்ததாக அறிவித்தனர்.
English Summary:
NEW DELHI: criticizing the court verdict, the Supreme Court opinion issued by former Justice Markandeya Katju, expressing regret for his actions, asked for forgiveness, the contempt of court case against him ended.