மொஹாலி : பஞ்சாப் சட்டசபை தேர்தலில் டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் முதல்வர் வேட்பாளராக நிறுத்தப்படலாம் என துணை முதல்வர் மனிஷ் சிசோடியா மறைமுகமாக கூறியுள்ளார்.
அடுத்த மாதம் நடக்க இருக்கும் 5 மாநில சட்டசபை தேர்தலில் உ.பி., தவிர மற்ற மாநிலங்களில் போட்டியிட உள்ளதாக ஆம்ஆத்மி அறிவித்துள்ளது. பஞ்சாபில் மொத்தம் உள்ள 117 சட்டசபை தொகுதிகளுக்கு வரும் பிப்ரவரி 4-ல் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. இதில், பாஜக, காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சிகளுக்கு இடையே மும்முனைப்போட்டி நிலவுகிறது. இதற்காக, ஆம் ஆத்மி கட்சியின் தலைவர்கள் அனைவரும் பஞ்சாபில் தீவிரப் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று, பஞ்சாபின் மொஹலியில் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் டில்லியின் துணை முதல்வர் மணிஷ் சிசோடியா பேசினார். அப்போது, பஞ்சாப் சட்டசபை தேர்தலில் கெஜ்ரிவாலை முதல்வராக கருதி வாக்களிக்குமாறு கேட்டுக் கொண்டார். இதன் மூலம் பஞ்சாப் தேர்தலில் கெஜ்ரிவால் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்படுவது கிட்டத்தட்ட உறுதியாகி விட்டது. மேலும் சிசோடியா பேசுகையில், 'ஆம் ஆத்மி சார்பில் முதல்வர் வேட்பாளர் யார் என பஞ்சாப்வாசிகள் என்னிடம் கேள்வி எழுப்புகின்றனர். அவர்களுக்கு நான் சொல்லும் பதில், பஞ்சாப் முதல்வராக கெஜ்ரிவாலை அமர்த்த வாக்களியுங்கள் என்பது தான். முதல்வராக யார் அமருவார்கள் என்பது முக்கியமல்ல. உங்கள் பிரச்னைகளை ஆம் ஆத்மி கட்சி சார்பில் கெஜ்ரிவால் தீர்த்து வைப்பார். அவரே அடுத்த முதல்வர் என எண்ணி கெஜ்ரிவாலுக்கு வாக்களியுங்கள். கெஜ்ரிவாலை முதல்ராக ஆக்க விரும்புவர்கள் இங்கு குரல் கொடுங்கள்.' எனத் தெரிவித்தார்.
மனிஷ் சிசோடியாவின் இந்த பேச்சு பஞ்சாப் மற்றும் டில்லி அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
English summary:
Mohali: Punjab Assembly elections, Chief Minister of Delhi Chief Minister Arvind Kejriwal, Manish Sisodia, indirectly, said Deputy Chief Minister candidate would be discontinued.