புனே: இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் கேப்டன் விராத் கோஹ்லி, கேதர் ஜாதவ் சதமடித்து கைகொடுக்க, இந்திய அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்தியா வந்துள்ள இங்கிலாந்து அணி, மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டி புனேயில் உள்ள மகராஷ்டிரா கிரிக்கெட் சங்க மைதானத்தில் இன்ற நடந்தது.
யுவராஜ் சிங் லெவன் அணியில் இடம் பிடித்தார். ரகானே, அமித் மிஸ்ரா, புவனேஷ்வர் குமார், மணிஷ் பாண்டே தேர்வாகவில்லை. 'டாஸ்' வென்ற இந்திய அணி கேப்டன் விராத் கோஹ்லி, 'பீல்டிங்' தேர்வு செய்தார்.
350 ரன் குவித்த இங்கிலாந்து:
இங்கிலாந்து அணிக்கு அலெக்ஸ் ஹேல்ஸ் (9), 'ரன்-அவுட்டாகி' ஏமாற்றினார். அபாரமாக ஆடிய ஜேசன் ராய் அரைசதம் கடந்தார். இவர், 73 ரன்கள் எடுத்து அவுட்டானார். கேப்டன் இயான் மார்கன் (28), பட்லர் (31) நிலைக்கவில்லை. பொறுப்பாக ஆடிய ஜோ ரூட் (78), பென் ஸ்டோக்ஸ் (62) அரைசதமடித்தனர். மொயீன் அலி (28) பெரிய அளவில் சோபிக்கவில்லை.இங்கிலாந்து அணி 50 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 350 ரன்கள் குவித்தது. வோக்ஸ் (9), வில்லே (10) அவுட்டாகாமல் இருந்தனர். இந்தியா சார்பில் பும்ரா, பாண்ட்யா தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
கோஹ்லி, ஜாதவ் சதம்:
கடின இலக்கை விரட்டும் இந்திய அணிக்கு ஷிகர் தவான், லோகேஷ் ராகுல் மோசமான துவக்கம் தந்தனர். டேவிட் வில்லே 'வேகத்தில்' தவான் (1), ராகுல் (8) அவுட்டாகினர். அடுத்து வந்த யுவராஜ் சிங் (15), தோனி (6) அணியை கைவிட்டனர். பொறுப்பாக ஆடிய கோஹ்லி, வில்லே, ஜாக் பால் பந்தில் தலா ஒரு சிக்சர் விளாசினார்.
இங்கிலாந்து பந்துவீச்சை எளிதாக சமாளித்த இவர் சதமடித்தார் . மறுமுனையில் ஒத்துழைப்பு தந்த கேதர் ஜாதவ், தன்பங்கிற்கு சதமடித்தார். ஐந்தாவது விக்கெட்டுக்கு 200 ரன்கள் சேர்த்த போது கோஹ்லி (122) அவுட்டானார். சிறிது நேரத்தில் கேதர் ஜாதவ் (120) வெளியேறினார். அடுத்து வந்த ரவிந்திர ஜடேஜா (13) ஏமாற்றினார்.
3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி:
கடைசி நேரத்தில் பொறுப்பாக ஆடிய ஹர்த்திக் பாண்ட்யா, அஷ்வின் தலா ஒரு சிக்சர் அடித்து வெற்றியை உறுதி செய்தனர்.இந்திய அணி 48.1 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 356 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. பாண்ட்யா (40), அஷ்வின் (15) அவுட்டாகாமல் இருந்தனர். இங்கிலாந்து சார்பில் ஜாக் பால் 3 விக்கெட் வீழ்த்தினார்.இந்த வெற்றியின்மூலம் இந்திய அணி 1-0 என முன்னிலை பெற்றது. இரண்டாவது போட்டி கட்டாக் நகரில் வரும் 19ல் நடக்கவுள்ளது.
English summary:
PUNE: The first one-day match against England captain Virat Kohli, Kedar Jadhav hundred helpers, the Indian team won by 3 wickets.