கோல்கட்டா: திரிணாமூல் காங்கிரஸ் எம்.பி., சுதீப் பந்த்யோபாத்யாயை சி.பி.ஐ., கைது செய்ததால் கோபம் அடைந்த அக்கட்சியினர் கோல்கட்டா பா.ஜ., அலுவலகம் மீது தாக்குதல் நடத்தினர். இதில், 12 பேர் படுகாயம் அடைந்தனர். பாதுகாப்புக்காக சி.ஆர்.பி.எப்., வீரர்கள் குவிக்கப்பட்டனர். இதனால், அங்கு பதட்டமான சூழல் நிலவுகிறது.
மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமூல் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது.
பா.ஜ., அலுவலகம் மீது தாக்குதல்:
நிதி நிறுவன மோசடி தொடர்பான வழக்கில் திரிணாமூல் கட்சியின் மூத்த தலைவரும் எம்.பி.,யுமான சுதீப் பந்த்யோபாத்யாவை சி.பி.ஐ., அதிகாரிகள் இன்று கைது செய்தனர்.
இதனால், கோபம் அடைந்த திரிணாமூல் கட்சியின் மாணவர் அணியினர் கோல்கட்டாவில் உள்ள பா.ஜ., அலுவலகத்தை முற்றுகையிட்டு தாக்குதல் நடத்தினர்.
12 பேர் காயம்; சிர்.ஆர்.பி.எப்., குவிப்பு:
கல் வீச்சு தாக்குதலில் பா.ஜ., கட்சியை சேர்ந்த 12 பேர் படுகாயம் அடைந்தனர். கார் கண்ணாடிகள் உடைக்கப்பட்டன. மத்திய அரசுக்கு எதிராக கோஷமிட்டு ஆர்பாட்டம் நடத்தினர். போலீசாருக்கும் ஆர்பாட்டக்கார்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து, பாதுகாப்புக்காக மத்திய ரிசர்வ் படை போலீசார் சம்பவ இடத்தில் குவிக்கப்பட்டுள்ளனர்.
பல கோடி மோசடி:
ரோஸ் வேலி எனப்படும் நிதி நிறுவனத்தில் பல கோடி ரூபாய் பணமோசடி நடந்ததாக 2 ஆண்டுகளுக்கு வழக்கு பதிவானது. பின்னர், அந்த வழக்கு சி.பி.ஐ., க்கு மாற்றப்பட்டது. விசாரணையில் அந்த நிறுவனத்தின் இயக்குநரும் திரிணாமூல் கட்சியை சேர்ந்தவருமான தபஸ் பாலை சி.பி.ஐ., அதிகாரிகள் கடந்த வாரம் கைது செய்தனர். இந்நிலையில், நிதி நிறுவனத்துடன் தொடர்பு வைத்திருந்த திரிணாமூல் எம்.பி., சுதீப் பந்த்யோபாத்யாய் இன்று கைது செய்யப்பட்டார்.
மம்தா கொந்தளிப்பு:
கைது நடவடிக்கைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள மம்தா பானர்ஜி கூறுகையில், "இந்த கைது நடவடிக்கைகள் பிரதமர் அலுவலகத்தின் வழிகாட்டுதலின் படி நடந்துள்ளது. ரூபாய் நோட்டு வாபஸ் திட்டத்தை எதிர்த்து பிரசாரம் செய்வதால் கைது செய்யப்படுகிறார்கள். இது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை" என்றார்.
இந்த விவகாரம் தொடர்பாக, திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் அவசர கூட்டம் இன்று மாலை நடந்தது. அதில், மத்திய அரசை கண்டித்து மாநிலம் முழுவதும் நாளை ஆர்பாட்டம் நடத்துவது என முடிவு எடுக்கப்பட்டது.
English summary:
Trinamool Congress MP, Sudeep pantyopatyayai CBI arrested the party of angry Kolkata BJP attack on the office. In which 12 people were injured. For security CRPF., Soldiers were deployed. Thus, there is a moment of panic.