சென்னை : தெலுங்கு கங்கை திட்டத்தின்படி சென்னைக்கு கிருஷ்ணா நீர் திறப்பு தொடர்பாக ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவை இன்று தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துகிறார்.
குடிநீர் தேவை பற்றி விவாதிப்பதற்காகவும், தெலுங்கு கங்கை திட்டம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்துவதற்காகவும் ஆந்திர தலைநகர் அமராவதிக்கு முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இன்று (ஜனவரி 12) செல்கிறார். அங்கு ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவை அவர் சந்தித்துப் பேசுகிறார். இந்த சந்திப்பு வேலகபுடியில் உள்ள இடைக் கால அரசு வளாகத்தில் பிற்பகல் 1 மணிக்கு நடைபெறுவதாக கூறப்படுகிறது. சந்திரபாபு நாயுடுவின் ஆலோசனையை ஏற்று இந்த பேச்சுவார்த்தைக்கு ஓ.பன்னீர்செல்வம் செல்வதாக கூறப்படுகிறது.
தெலுங்கு கங்கை நீர் பங்கீடு தொடர்பாக ஆந்திரா சென்று, அம்மாநில முதல்வருடன் தமிழக முதல்வர் பேச்சுவார்த்தை நடத்துவது இதுவே முதல்முறையாகும். இதற்கு முன்பு இரண்டு மாநிலங்களுக்கும் இடையே கடிதப் போக்குவரத்து மட்டுமே இருந்து வந்தது. தெலுங்கு கங்கை திட்ட ஒப்பந்தத்தின்படி ஆந்திர விவசாயிகளின் பங்களிப்பாக ரூ.400 கோடி தமிழகம் கொடுக்க வேண்டும். இந்த ஒப்பந்தம் எம்.ஜி.ஆர்., - என்.டி.ராமராவ் ஆகியோரின் ஆட்சிக் காலத்தில் போடப்பட்டது.
English summary:
Chennai: Telugu Ganga project in relation to the opening of Krishna water to Madras, Andhra Pradesh Chief Minister Chandrababu Naidu today met Tamil Nadu Chief opannircelvam there.