போபால்: மத்திய பிரதேசத்தில், வங்கியில் வழங்கப்பட்ட, 2,000 ரூபாய் நோட்டுகளில், காந்தியின் படம் இல்லாததை பார்த்து, அதிர்ச்சி அடைந்த வாடிக்கையாளர்கள், அவற்றை வங்கியில் திரும்ப ஒப்படைத்தனர்.
காந்தி படம் இல்லை:
ம.பி., மாநிலத்தில், முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கிறது. ஷிவ்பூர் மாவட்டம், பிச்சுகாவடி கிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்ண மீனா. விவசாயியான இவர், சமீபத்தில், அங்குள்ள, எஸ்.பி.ஐ., வங்கிக் கிளையில், தன் கணக்கில் இருந்து, 2,000 ரூபாய் எடுத்தார். வங்கியில் இருந்து வெளியில் வந்தபின், ரூபாய் நோட்டில் காந்தி படம் இல்லாததை கவனித்தார். அங்கு வந்த அவரது நண்பரிடமும், காந்திப் படம் இல்லாத, 2,000 ரூபாய் நோட்டுகள் இருந்தன. இதையடுத்து, இருவரும் மீண்டும் வங்கிக்கு சென்று, தங்களிடம் இருந்த, 2,000 ரூபாய் நோட்டுகளில் காந்திப் படம் இல்லை என்று கூறி, திரும்ப ஒப்படைத்தனர்.
பிழைகள் சகஜமே:
சம்பவம் குறித்து, வங்கியின் கிளை மேலாளர் ஆகாஷ் ஸ்ரீவாத்சவ் கூறியதாவது: கடந்த, 1996ல் இருந்து, காந்திப் படத்துடன் கூடிய ரூபாய் நோட்டுகள் அச்சிடப்பட்டு வருகின்றன. அச்சுப் பிழை காரணமாக, 2,000 ரூபாய் நோட்டில், காந்தி படம் இடம் பெறவில்லை; இந்த நோட்டுகள் போலியானவை அல்ல; குறைபாடுள்ள ரூபாய் நோட்டுகள் திரும்பப் பெறப்படுகின்றன. நோட்டுகள் அச்சிடும்போது, சில நேரங்களில் இதுபோன்ற பிழைகள் ஏற்படுவது சகஜமானது தான். இவ்வாறு அவர் கூறினார்.
English summary:
Bhopal: Madhya Pradesh, the Bank issued 2,000 banknotes, in the absence of Gandhi's movie watching, Horrified customers, and handed them back to the bank.