சென்னை : அங்கீகாரமில்லாத வீட்டு மனை விற்பனைக்கான தடையை ஜனவரி 30 ம் தேதி வரை நீட்டித்து சென்னை ஐகோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது.
பத்திரபதிவுக்கு தடை :
தமிழகத்தில், விவசாய நிலங்களை பாதுகாக்க கோரிய வழக்கை விசாரித்த சென்னை ஐகோர்ட் , அங்கீகாரமில்லா மனைகள் விற்பனைக்கு தடை விதித்து, 2016 செப்., 9ல் உத்தரவிட்டது. இதனால், தமிழகம் முழுவதும் வீடு, மனை விற்பனை முடங்கியது. வரலாறு காணாத வகையில், பத்திரப் பதிவும் வீழ்ச்சி அடைந்தது. இந்த வழக்கு, 2016 அக்., 21ல் விசாரணைக்கு வந்த போது, அக்., 20 வரை பதிவான மனைகளின், மறு விற்பனையை அனுமதிப்பதற்கான அரசாணை நகல் தாக்கல் செய்யப்பட்டது. ஆனால், நிலங்களின் வகைப்பாட்டு விபரங்களை பட்டியலிட்டு தாக்கல் செய்ய ஐகோர்ட் உத்தரவிட்டது.
பின், நவ., 16, டிச., 5ம் தேதிகளில், வழக்கு விசாரணைக்கு வந்த போது, அங்கீகாரமில்லாத மனைகளை வரன் முறை செய்ய திட்டமிட்டுள்ளதாக தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. திட்ட செயலாக்கம் குறித்த, முழு விபரங்களை மூன்று வாரங்களில் தாக்கல் செய்ய உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை, இன்றைக்கு (ஜனவரி 09) நீதிமன்றம் ஒத்திவைத்தது.
தடை நீட்டிப்பு :
அதன்படி, இந்த வழக்கு, ஐகோர்ட்டில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, அங்கீகாரமில்லாத விளை நிலங்களை வீட்டு மனைகளாக பத்திரப்பதிவு செய்ய விதிக்கப்பட்டுள்ள தடையை ஜனவரி 30 ம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டது. நிலங்களை வகைப்படுத்துவதற்கு மேலும் 2 வார கால அவகாசம் தேவை என தமிழக அரசு சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. தமிழக அரசின் கோரிக்கையை ஏற்ற ஐகோர்ட், வழக்கு விசாரணையை ஜனவரி 30 ம் தேதிக்கு ஒத்திவைத்தது.
English summary:
Chennai: unauthorized Residential land for sale in Madras High Court ordered the ban extended to January 30.