புதுடில்லி ; 'மற்ற நாட்டில் உள்ள அணு உலைகளை தாக்க மாட்டோம்' என, இந்தியாவும், பாகிஸ்தானும் செய்து கொண்ட ஒப்பந்தத்தின்படி, அணு உலைகளின் பட்டியலை, இரு நாடுகளும், தொடர்ந்து, 26வது ஆண்டாக, நேற்று பகிர்ந்து கொண்டன.
ஒப்பந்தம்:
'மற்ற நாட்டில் உள்ள அணு உலைகளை தாக்க மாட்டோம்' என, இந்தியாவும், பாகிஸ்தானும், 1988ல் ஒப்பந்தம் செய்தன; இது, 1991 முதல் நடைமுறைக்கு வந்தது. இரு நாடுகளும், தங்கள் நாட்டில் உள்ள அணு உலைகளின் பட்டியலை மற்ற நாட்டுடன், ஒவ்வொரு ஆண்டும், ஜனவரி 1ம் தேதியில் பகிர்ந்து கொள்ள வேண்டும்; அதன்படி, இரு நாடுகளும், நேற்று, இந்தப் பட்டியலை பகிர்ந்து கொண்டன.
பகிர்வு:
பாகிஸ்தானின் இஸ்லாமாபாத்தில் உள்ள இந்திய துாதரகம் மூலம், இந்தப் பட்டியல் பாகிஸ்தானிடம் ஒப்படைக்கப்பட்டது. அதேபோல், டில்லியில் உள்ள பாகிஸ்தான் துாதரகம் மூலம், இந்தப் பட்டியல் ஒப்படைக்கப்பட்டது.
'கடந்த, 1992 முதல் இந்தப் பட்டியல் பகிர்ந்து கொள்ளப்படுகிறது. அதன்படி, 26வது ஆண்டாக நேற்றும் இந்தப் பட்டியில் அளிக்கப்பட்டது' என, வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதைத் தவிர, 2008 ஒப்பந்தத்தின்படி, தங்கள் நாட்டின் சிறையில் உள்ள மற்ற நாட்டைச் சேர்ந்தவர்கள் மற்றும் மீனவர்கள் பட்டியலும் நேற்று பகிர்ந்து கொள்ளப்பட்டது.
English Summary:
New Delhi; "We will not attack the other nuclear plants in the country ', as India and Pakistan have made to the agreement, the list of nuclear reactors, the two countries, following the 26th year, shared yesterday.