சென்னை - எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவை ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி சிறப்புடன் கொண்டாடுமாறு சென்னையில் தொண்டர்களை சந்தித்த அ.தி.மு.க பொதுசெயலாளர் சசிகலா அறிவுறுத்தினார்.
தொண்டர்களுடன் சந்திப்பு:
அ.தி.மு.க பொதுக்குழு கூட்டம் கடந்த 29-ம் தேதி சென்னையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அ.தி.மு.க பொதுசெயலாளராக சசிகலா ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டு நியமிக்கப்பட்டார். இதைத்தொடர்ந்து கடந்த 31ம் தேதி சென்னையில் அ.தி.மு.க தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற எளிய விழாவில் சசிகலா அ.தி.மு.க பொதுசெயலாளராக பொறுப்பேற்று கொண்டார். இந்த நிலையில் அ.தி.மு.க பொதுசெயலாளர் சசிகலா நேற்று அ.தி.மு.க தலைமைக்கழகத்தில் தொண்டர்களை சந்தித்தார்.
வட சென்னை:
வட சென்னை வடக்கு மாவட்டத்தின் சார்பில் அ.தி.மு.க அவைத்தலைவர் மதுசூதனன், மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் ஆர்.எஸ்.ராஜேஷ், மகளிர் அணி செயலாளர் அஞ்சுலட்சுமி, உள்ளிட்டோரும் வட சென்னை தெற்கு மாவட்டம் சார்பில் அமைச்சர் ஜெயகுமார், மாவட்ட செயலாளர் பாலகங்கா, பகுதி செயலாளர் சி.பி.ராமஜெயம் மற்றும் வழக்கறிஞர் அணி செயலாளர் எம்.எல்.ஜெகன் உள்ளிட்டோரும் தென் சென்னை வடக்கு மாவட்டம் சார்பில் மாவட்ட செயலாளர் வி.பி.கலைராஜன் தலைமையில் முன்னாள் கவுன்சிலர் சின்னையன் என்கிற ஆறுமுகம், அண்ணாதொழிற்சங்க மாவட்ட செயலாளர் ஏ.ஏ.அர்ஜூன், வழக்கறிஞர் அணி செயலாளர் தேவேந்திரன் ஆயிரம் விளக்கு பேரவை செயலாளர் சதாசிவம், உள்ளிட்ட நிர்வாகிகளும்,
தென் சென்னை :
தென் சென்னை தெற்கு மாவட்ட அ.தி.மு.க சார்பில் விருகை ரவி எம்.எல்.ஏ உள்ளிட்டோருமாக ஆயிரக்கணக்கான நிர்வாகிகள் நேற்று அ.தி.மு.க பொதுசெயலாளர் சசிகலாவை சந்தித்து பேசினர். இதே போல காஞ்சிபுரம் கிழக்கு, காஞ்சிபுரம் மத்தியம், காஞ்சிபுரம் மேற்கு, திருவள்ளூர் கிழக்கு, திருவள்ளூர் மேற்கு,வேலூர் கிழக்கு,வேலூர் மேற்கு, திருவண்ணாமலை வடக்கு, திருவண்ணாமலை தெற்கு ஆகிய மாவட்டங்களை சேர்ந்த அமைச்சர்கள் சேவூர் ராமச்சந்திரன், கே.சி.வீரமணி, கலசப்பாக்கம் பன்னீர்செல்வம் உள்ளிட்ட நிர்வாகிகளும் சந்தித்து பேசினார்.
அப்போது அ.தி.மு.க பொதுசெயலாளர் சசிகலா பேசியதாவது:
தொண்டர்களுக்கு வேண்டுகோள்:
வரும் 17 ம்தேதி அ.தி.மு.கவின் நிறுவனத்தலைவர் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா ஆண்டாகும். இந்த விழாவை சிறப்புடன் நடத்த வேண்டும். ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்டங்களை வழங்கி எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவை கொண்டாட வேண்டும். அத்தகைய விழாக்களுக்கு நானே நேரில் வரத்தயாராக இருக்கிறேன். அதேபோல் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாள் விழாவை வரும் பிப்ரவரி மாதம் 24-ம் தேதி சிறப்புடன் கொண்டாட வேண்டும்.
ஒற்றுமையாக இருக்க வலியுறுத்தல்:
அ.தி.மு.கவின் மாவட்ட செயலாளர்கள், மற்ற நிர்வாகிகளோடு இணைந்து செயல்படவேண்டும், கட்சியில் கறையான்களுக்கு சற்றும் இடமளித்து விடக்கூடாது. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தலைமையில் எப்படி ராணுவக் கட்டுக்கோப்போடு கட்சியில் இருந்தோமோ, அதே கட்டுப்பாடுடன் ஒற்றுமையோடு பணியாற்ற வேண்டும். புதிய உறுப்பினர்களை அ.தி.மு.கவில் சேர்க்க வேண்டும்.குறிப்பாக கல்லூரி மாணவர்கள், மாணவியர் மற்றும் இளைஞர்களை புதிய உறுப்பினர்களாக்கி கட்சியை வளர்க்க ண்டும், என்று அ.தி.மு.க தொண்டர்களுக்கு பொதுசெயலாளர் சசிகலா வேண்டுகோள் விடுத்தார்.
நாளை சந்திப்பு:
முன்னதாக அ.தி.மு.க தலைமைக்கழகத்திற்கு வந்த சசிகலாவுக்கு பிரம்மாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது. தலைமைக்கழகத்திற்கு வந்த சசிகலாவை சின்னம்மா வாழ்க என்று தொண்டர்கள் வாழ்த்தி வரவேற்றனர். இதைத்தொடர்ந்து நாளை தலைமைக்கழகத்தில் மீண்டும் சசிகலா தொண்டர்களை சந்திக்கிறார். தேனி, திண்டுக்கல், விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம், மாலையில் சேலம் மாநகர், சேலம் புறநகர், நாமக்கல், ஈரோடு மாநகர், ஈரோடு புறநகர் ஆகிய பத்து மாவட்டங்களின் அ.தி.மு.க நிர்வாகிகளை நாளை அ.தி.மு.க பொதுசெயலாளர் சசிகலா சந்திக்கிறார்.
English Summary:
Chennai - MGR centenary welfare payments to the poor people to celebrate with a special meeting in Chennai, AIADMK General Secretary Shashikala urged volunteers.