
கறுப்பு பணம் மற்றும் கள்ள நோட்டை ஒழிப்பதற்காக 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என பிரதமர் மோடி நவ.,8 ம் தேதி அறிவித்தார்.இதையடுத்து, வருமான வரித் துறை அதிகாரிகள் கறுப்பு பணத்தை கண்டுபிடிக்க அதிரடி சோதனையில் ஈடுப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில், சோதனை விவரம் குறித்து வருமான வரித் துறை இன்று வெளியிட்டுள்ள தகவல்:
ரூபாய் நோட்டு வாபஸ் அறிவிப்புக்கு பிறகு, ஜன., 1ம் தேதி வரை இந்தியா முழுவதிலும் வருமான வரித் துறையால் 1,100 நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. அவற்றுள் 556 ஆய்வுகள், 253 சோதனைகள் மற்றும் 289 பறிமுதல் சம்பவங்கள் அடங்கும்.
ரூ. 4,663 கோடி கணக்கில் வராத பணம்:
இந்த நடவடிக்கைகளால் 110 கோடி புதிய நோட்டுகள் உட்பட 562 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ரூ. 4,663 கோடி கணக்கில் வராத பணம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
5062 நோட்டீஸ் அனுப்பி உள்ளோம். 500 வழக்குகளில் சி.பி.ஐ., மற்றும் அமலாக்கத் துறைக்கு பரிந்துரைத்துள்ளோம்.
English Summary:
New Delhi: The Income Tax Department in the country of 562 crore was seized in the raid. Rs. 4,663 crore unaccounted money was found.