போபால் : நாட்டில் முதல் முறையாக ‛மகிழ்ச்சித் துறை'யை அறிமுகப்படுத்திய ம.பி., அரசு, அதனை மாநிலம் முழுவதும் விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளது.
விரிவுபடுத்த திட்டம்:
மத்தியப் பிரதேசத்தில், முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கிறது. பொதுமக்கள் நலனை கருத்தில் கொண்டு, ‛மகிழ்ச்சித் துறை' ஒன்றை அம்மாநில அரசு அண்மையில் அறிமுகப்படுத்தியது. ஏழ்மையில் வாடும் மக்களுக்கு தேவையான உதவிகள், தகுதியான நபர்களுக்கு சென்று சேர்வதற்காக இத்துறை உருவாக்கப்பட்டது.
இத்துறையின் மூலம் உதவி செய்ய விரும்புபவர்கள் இத்துறையை தொடர்பு கொண்டு தகவல் அளித்தால் இத்துறையினர் அந்த உதவி தேவைப்படும் தகுதியான நபருக்கு அந்த உதவி கிடைக்க வழி செய்வர். இந்த சேவையை அரசு இலவசமாக செய்து வருகிறது. இந்நிலையில் அதனை மாநிலம் முழுவதும் உள்ள 51 மாவட்டங்களுக்கு விரிவுபடுத்த ம.பி., அரசு திட்டமிட்டுள்ளது.
மகிழ்ச்சி:
இதுகுறித்து ம.பி., முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் தெரிவித்ததாவது: உதவிகள் தேவைப்படுவோருக்கு பயன் கிடைக்குமாறு ‛மகிழ்ச்சி துறை' வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் ஏழ்மை நிலையில் உள்ளவர்கள் உட்பட அனைத்து தரப்பினரின் மகிழ்ச்சியும் உறுதி செய்யப்படும். மாநிலம் முழுவதும் இதனை விரிவுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் இணைந்து பணியாற்ற இதுவரை 13 ஆயிரம் தன்னார்வலர்கள் பதிவு செய்துள்ளனர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
English Summary:
Bhopal : For the first time in the country 'delight position introduced Madhya Pradesh government, it plans to expand across the state.