நாக்பூர் : மகாராஷ்டிரா நகராட்சி கவுன்சில் தேர்தலில் அதிக இடங்களில் வென்று பா.ஜ., முதலிடம் பிடித்தது. இதன் மூலம் மாநில ஆளும் கட்சியான பா.ஜ., உள்ளாட்சி தேர்தலிலும் வெற்றி பெற்று தனது ஆதிக்கத்தை நிலை நாட்டியுள்ளது.
ஆதிக்கம்:
மகாராஷ்டிரா நகராட்சி கவுன்சில் தேர்தல் 4 கட்டங்களாக நடைபெற்றது. இறுதிக்கட்டமாக நாக்பூர், கேண்டியா ஆகிய மாவட்டங்களில் ஓட்டுப்பதிவு கடந்த 8ம் தேதி (ஜன.,8) நடைபெற்றது. இதில் 244 இடங்களுக்கு நடைபெற்ற இறுதிக் கட்டத் தேர்தலில் 100 இடங்களில் வெற்றி பெற்று பா.ஜ., முதலிடம் பிடித்தது. இதில் 11 மாநகராட்சி கவுன்சில் தலைவர் பதவியிடங்களில் 7 இடங்களை பா.ஜ., வென்றுள்ளது. காங்., கட்சிக்கு இரு இடங்கள் மட்டுமே கிடைத்தன.
முதலிடம்:
ஒட்டுமொத்தமாக 4 கட்டத் தேர்தல்களிலும் 1,190 கவுன்சிலர்களும், 71 நகராட்சி கவுன்சில் தலைவர்களும் பா.ஜ., சார்பில் வெற்றி பெற்றுள்ளனர். இதற்கு அடுத்த இடத்தில்
காங்., கட்சியும், மூன்றாவது இடத்தை தேசிவாத காங்., கட்சியும், 4வது இடத்தை சிவசேனா கட்சியும் பிடித்தன. மாநில ஆளும் கட்சியான பா.ஜ., உள்ளாட்சி தேர்தலிலும் வெற்றி பெற்று தனது ஆதிக்கத்தை நிலை நாட்டியுள்ளது.
English Summary:
Nagpur: Maharashtra BJP won the most seats in the municipal council elections, took first place. The state's ruling party, the BJP, has won the local elections has planted its dominant position.