புதுடெல்லி - ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் மாறன்சகோதரர்கள் மீது குற்றச்சாட்டுகளை பதிவு செய்வதற்கான உத்தரவை வரும் 24ம் தேதிக்கு ஒத்திவைப்பதாக டெல்லி சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
வலுக்கட்டாயமாக விற்பனை:
தி.மு.க.வைச் சேர்ந்த தயாநிதிமாறன், மத்திய தொலைத் தொடர்புத்துறை அமைச்சராக இருந்தபோது, ஏர்செல் நிறுவன அதிபர் சிவசங்கரனை மிரட்டி, அந்நிறுவனப் பங்குகளை மலேசியாவைச் சேர்ந்த மேக்சிஸ் நிறுவனத்திற்கு வலுக்கட்டாயமாக விற்பனை செய்ய வைத்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதற்கு கைமாறாக தயாநிதிமாறனின் சகோதரர் கலாநிதிமாறனுக்குச் சொந்தமான சன் டி.வி. குழுமத்திற்கு மேக்சிஸ் நிறுவனத்திடமிருந்து 743 கோடி ரூபாய் சட்டவிரோதமாக அளிக்கப்பட்டதாக கூறப்படுகிறகது.
தனித்தனி வழக்குகள்:
இதுதொடர்பாக சி.பி.ஐ மற்றும் மத்திய அமலாக்கப்பிரிவு சார்பில் புலன்விசாரணை மேற்கொள்ளப்பட்டு, தனித்தனியாக வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்குகள், டெல்லி பாட்டியாலா ஹவுஸ் சி.பி.ஐ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகின்றன. இவ்விரு வழக்குகளிலும் தனித்தனியே குற்றப்பத்திரிகைகள் தாக்கல் செய்யப்பட்டன.
24 ம் தேதி உத்தரவு :
இவ்வழக்கில் மாறன் சகோதரர்கள் மீது குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், குற்றச்சாட்டுகள் தொடர்பான ஆவணங்கள் தயாரிக்கப்படாததால், அறிவிப்புக்கான தேதி ஒத்திவைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், ஏர்செல்-மேக்சிஸ் வழக்கு, நீதிபதி ஓ.பி. சைனி முன்னிலையில் மீண்டும் நேற்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் ஏராளமான ஆவணங்களை ஆராய வேண்டிய நிலைமை இருப்பதால் குற்றச்சாட்டுகள் தொடர்பான ஆவணங்களை தயாரிப்பதில் மேலும் கால அவகாசம் தேவைப்படுகிறது என தெரிவித்த நீதிபதி ஓ.பி.சைனி, உத்தரவுக்கான அறிவிப்பு வரும் 24-ம் தேதி வெளியிடப்படும் என தெரிவித்தார்.
English summary:
New Delhi - orders for the registration of charges on Aircel Maxis case maran brothers to adjourn on April 24 by CBI in Delhi Said the special court