
தமிழகத்தில் ஜல்லிக்கட்டை நடத்தக்கோரி கடந்த 7 நாட்களாக இளைஞர்கள் போராடி வருகின்றனர். இந்நிலையில் போராட்டத்திற்கான இலக்கு எட்டப்பட்டுள்ளதால், அமைதியான முறையில் கலைந்து செல்லும்படி போலீசார் கோரிக்கை விடுத்தனர். இதனை ஏற்க மறுத்த இளைஞர்கள், தங்களுக்கு தற்காலிக தீர்வு தங்களுக்கு வேண்டாம் என்றும் நிரந்தர தீர்வு தான் வேண்டும் எனவும் கூறி போராட்டத்தை கைவிட மறுத்தனர்.
இதனையடுத்து மெரினாவில் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த இளைஞர்கள்- மாணவர்களின் பிரதிநிதிகளிடம் கூடுதல் ஆணையர் சங்கர் பேச்சுவார்த்தை நடத்தினார். பேச்சுவார்த்தையின் முடிவிலும் இளைஞர்கள் போராட்டத்தை கைவிட மறுத்ததையடுத்து, மெரினாவிலிருந்து போராட்டக்காரர்களை வலுக்கட்டாயமாக போலீசார் அப்புறப்படுத்தி வருகின்றனர். இதனால் அங்கு பதற்றம் நிலவி வருகிறது.
வாகனங்களுக்கு அனுமதியில்லை:

சேலம் காவல்துறை அறிவிப்பு:
சேலம் காவல் ஆணையர் சஞ்சய்குமார் மாணவர்களிடையே பேசியதாவது: மாணவர் போராட்டத்தில் சில சில விஷமிகள் புகுந்து சட்ட விரோத செயல்களில் ஈடுபட்டுள்ளனர். பொது சொத்துக்கு சேதம் விளைவிக்க கூடாது. பொதுமக்களின் இயல்பு வாழ்க்கைக்கு பாதிப்பு ஏற்படுத்தக் கூடாது. சட்ட விரோத செயல்களிலிருந்து மாணவர்கள் விலகி இருக்க வேண்டும். அறவழிப் போராட்டத்துக்கு காவல்துறை ஒத்துழைப்பு அளிக்கும். இவ்வாறு அவர் பேசினார்.
இந்நிலையில் விருதுநகர் தேசபந்து மைதானத்தில் போராடி வந்த போராட்டக்காரர்களை போலீசார் அப்புறப்படுத்தியுள்ளனர்.
English summary:
Chennai: Marina refused to accept the request from the police to disperse the protesters, the police have forcibly. Tension is mounting in the Marina.