சென்னை : சென்னை மெரினாவில், இன்று பிற்பகல் முதல் மீண்டும் அதிக அளவில் போலீசார் குவிக்கப்பட்டு வருகின்றனர். இதனால் மெரினாவை சுற்றி உள்ள பகுதிகளில் மீண்டும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
மீண்டும் பதற்றமாக மெரினா :
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக ஜனவரி 17 ம் தேதி முதல் 23 வரை தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் மாணவர்கள், இளைஞர்கள், பொதுமக்கள் அமைதியான முறையில் போராட்டம் நடத்தினர். சென்னை மெரினாவில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் திரண்டு, ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக நடத்திய போராட்டம் உலகம் முழுவதிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. அதுவரை அமைதியான முறையில் நடந்து வந்த போராட்டம், ஜனவரி 23 ம் தேதி சென்னையில் கலவரமாக மாறியது. தீவைப்பு, கல் வீச்சு உள்ளிட்ட சம்பவங்களும் ஆங்காங்கே அரங்கேறின. இது தொடர்பாக இதுவரை 215 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், மீண்டும் போராட்டம் நடத்துவதற்காக மெரினாவில் மாணவர்கள் கூட திட்டமிட்டிருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மெரினாவில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். நேற்று முதல், மெரினாவில் போராட்டம் நடத்த போலீஸ் துறை தடை விதித்துள்ளது குறிப்பிடதக்கது.
English Summary:
Chennai Marina, in the afternoon of the first deployment of the police are at the highest level again. Once again, there is tension in the areas around the marina.