புதுடில்லி : பயங்கரவாதி மசூத் அசாரை ஐ.நா., சபை மூலம் சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்க இந்தியா மேற்கொண்டு வரும் முயற்சிக்கு பிரான்ஸ் ஆதரவு தெரிவித்துள்ளது.
கடும் நடவடிக்கை:
நான்கு நாள் பயணமாக இந்தியா வந்துள்ள பிரான்ஸ் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜீன் மார்க் அய்ரால்ட் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது: யூரி தாக்குதல் நடத்தப்பட்டதையடுத்து, இந்தியா நடத்திய சர்ஜிகல் அட்டாக்கில் தவறில்லை. இந்தியாவுக்கு எதிரான பயங்கரவாத தாக்குதல்களை பிரான்ஸ் வன்மையாக கண்டிக்கிறது. பயங்கரவாத விவகாரத்தில் இந்தியாவுக்கு பிரான்ஸின் ஆதரவு எப்போதும் உண்டு. பயங்கரவாத அமைப்புகளுக்கு எதிராக சர்வதேச சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்க
வேண்டும்.
இந்தியாவுக்கு ஆதரவு:
ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பின் தலைவன் மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்க ஐ.நா.,வில் இந்தியா மேற்கொள்ளும் முயற்சிக்கு, சீனா முட்டுக்கட்டை போடுவது வருத்தமளிக்கிறது. ஐ.நா.,வின் தடை செய்யப்பட்ட பட்டியலில் ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பு ஏற்கனவே இருக்கும் நிலையில், அவ்வமைப்பின் தலைவன் மசூத் அசாரையும் பயங்கரவாதி பட்டியலில் சேர்க்க வேண்டும். இவ்விவகாரத்தில் இந்தியாவின் கோரிக்கையை ஆதரிக்கும் பிரான்ஸ், இந்தியாவுடன் இணைந்தும் செயல்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
English summary:
NEW DELHI : terrorist Masood Azhar Council to declare the international terrorist, has France's support to India's efforts.