சென்னை - மாநிலம் முழுவதும் ஏற்பட்ட வறட்சி காரணமாக ஏற்பட்ட பயிர் பாதிப்பு குறித்து ஆய்வு நடத்த அமைச்சர்கள்- கலெக்டர்கள் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும், இந்த குழு, மாவட்டங்களில் சுற்றுப்பயணம் செய்து ஆய்வு நடத்திய பிறகு அளிக்கும் அறிக்கையின் படி, பயிர் பாதிப்பக்கு உரிய நிவாரணத் தொகை வழங்கப்படும் என்று முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கலெக்டர்களுக்கு அறிவுறுத்தல்:
வடகிழக்கு பருவமழை பொய்த்து விட்டதன் அடிப்படையில், மாநிலம் முழுவதும் வறட்சி சூழ்நிலை உருவாகி உள்ளது. மத்திய அரசின் புதிய வழிகாட்டுதல் நெறிமுறைகளின்படி மாவட்டங்களில் 10 சதவீத அளவு கிராமங்களில் பயிர்நிலை குறித்து நேரடி ஆய்வு செய்யப்பட வேண்டும். அதன் பின்னரே, மாவட்டங்கள் வறட்சி பாதித்தவையாக அறிவிக்க இயலும். எனவே, சென்னை நீங்கலாக இதர மாவட்டங்களை நேரடி ஆய்வு செய்து, பயிர் நிலவரங்கள் மற்றும் வறட்சி நிலை குறித்து அரசுக்கு அறிக்கை அளித்திட மாவட்ட ஆட்சித் தலைவர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
அமைச்சர்கள் குழு:
இதனை மேற்பார்வையிட்டு அரசுக்கு விரைந்து அறிக்கை அளிக்க ஏதுவாக அமைச்சர்கள் மற்றும் மூத்த இந்திய ஆட்சிப் பணி அதிகாரிகள் கொண்ட குழுக்கள் உடனடியாக அமைக்கப்படும். இந்தக் குழுக்கள் 9-ம் தேதி வரை மாவட்டங்களில் சுற்றுப்பயணம் செய்து 10-ம் தேதி தங்களது அறிக்கையினை அரசுக்கு அளிக்கும். இந்த அறிக்கைகளின் அடிப்படையில், வறட்சி பாதிப்பு குறித்து அறிவிப்பு வெளியிடப்பட்டு தேவையான நிவாரணங்கள் அனைத்தையும் அரசு வழங்கும் என்று உறுதிபட தெரிவித்துக் கொள்கிறேன். பயிர் நிலைமைகள் குறித்து உயர்மட்டக்குழு அறிக்கை அளித்தவுடன், பயிர் பாதிப்புக்கு உரிய நிவாரணத் தொகையை அரசு வழங்கும் என்ற உத்தரவாதத்தையும் நான் தெரிவித்துக் கொள்கிறேன்.இவ்வாறு அறிக்கையில் அவர் தெரிவித்துள்ளார்.
அமைச்சரவை குழு:
இதனிடையே, மாநி
லத்தில் நிலவி வரும் வறட்சி நிலவரம் குறித்து விவாதிக்க இன்று, சென்னை கோட்டையில், அமைச்சரவைக்குழு முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் தலைமையில் கூடுகிறது.
English summary:
The drought caused crop damage across the state to conduct a study on the portfolios To set up a team of collectors, the band toured the research conducted in the districts will then report, due to crop damage has opannircelvam CM relief fund that will be given