ஆமதாபாத்: பொருளாதாரத்தை மாற்றியமைக்க இந்தியா தைரியமான முடிவுகளை எடுக்க வேண்டும் என மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி பேசினார்.
'வைப்ரன்ட் குஜராத்' எனப்படும், நான்கு நாட்கள் முதலீட்டாளர்கள் மாநாடு, குஜராத்தின் காந்தி நகரில் நடந்து வருகிறது. இந்த மாநாட்டில் மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி கலந்து கொண்டார்.
அவர் பேசியதாவது: அரசு நிர்வாகத்தில் வெளிப்படை தன்மை கொண்டு வருவதில் தீவிரமாக உள்ளோம். மறைமுக பொருளாதாரம் வளர்வதை அனுமதிக்க முடியாது. பொருளாதாரத்தை மாற்றியமைக்க தைரியமான முடிவுகள் தேவை. கடினமான கட்டங்களை, கடினமான முடிவுகள் மூலம் கடந்து விட்டோம். தற்போது அனைத்தையும் சுத்தப்படுத்த வேண்டிய நேரம். இதற்கான தைரியமான முடிவுகள் தேவைப்படுகிறது.
ஜி.எஸ்.டி., மசோதா நிறைவேறிய பின்னர், நாடு முழுவதும் சரக்குகளை எளிதில் கையாள முடியும். இந்த மசோதாவில் கடந்த 2 வருடங்களில், வேறுபாடுகள் மாற்றப்பட்டன. ஜிஎஸ்டி மசோதா நிறைவேற்ற தேவையான அளவு முயற்சி செய்யப்பட்டது. ஜிஎஸ்டி தொடர்பான பிரச்னைகள் தீர்க்கப்பட்டுள்ளது. சில முக்கிய பிரச்னைகள் மட்டுமே உள்ளது. அது விரைவில் தீர்க்கப்படும் எனக்கூறினார்.
English Summary:
Ahmedabad: India's economy to revert to take bold decisions, Finance Minister Arun Jaitley said.