சென்னை: தமிழக அரசின் இலக்கிய விருதுகள் வழங்கும் விழாவில் பங்கேற்ற முதல்வர் பன்னீர் செல்வம், நலம்தானா நலம்தானா பாட்டுபாடி அசத்தினார்.
அரசு விருதுகள்:
தமிழக அரசு சார்பில், தமிழ் அறிஞர் விருதுகளை முதல்வர் பன்னீர் செல்வம் வழங்கினார். இதன்படி, புலவர் வீரமணி - திருவள்ளுவர்; பண்ருட்டி ராமச்சந்திரனுக்கு - பெரியார்; மருத்துவர் துரைசாமி - அம்பேத்கர்; கவிஞர் கூரம் துரை - அண்ணா; நீலகண்டன் - காமராஜர்; பேராசிரியர் கணபதிராமன் - பாரதியார்; கவிஞர் பாரதி - பாரதிதாசன்; பேராசிரியர் மறைமலை இலக்குவனார் - திரு.வி.க.; மீனாட்சி முருகரத்தினம் - கி.ஆ.பெ.விசுவநாதம் விருது வழங்கப்பட்டது. சென்னை, கலைவாணர் அரங்கில், நடைபெற்ற, திருவள்ளுவர் திருநாள் விழாவில், முதல்வர் பன்னீர்செல்வம், விருதுகளை வழங்கினார். ஒரு லட்சம் ரூபாய்க்கான காசோலை, ஒரு சவரன் தங்கப்பதக்கம், தகுதி சான்றிதழ் ஆகியவை வழங்கப்பட்டது. மேலும், வயது முதிர்ந்த, 50 தமிழறிஞர்களுக்கு, நிதியுதவி வழங்கும் அரசாணைகள் அளிக்கப்பட்டன.
ஜெ.,வழியில்...:
இந்த விழாவில் முதல்வர் பன்னீர்செல்வம் பேசியதாவது: மறைந்த முதல்வர் ஜெ., ஆட்சி திருக்குறளின்படி, தமிழகத்தில் அமைந்துள்ளது. மறைந்த முதல்வர் ஜெ , காட்டிய வழியில் தமிழக அரசு பயணிக்கும். தமிழ் வளர்ச்சிக்கு அரசு அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறது. தமிழ் கவிஞர்கள் நல்ல நகைச்சுவையுடன் ஆழ்ந்த கருத்துகளை எழுதி வருகின்றனர். விருதுகள் கொடுப்பது இளைஞர்கள் மத்தியில் தமிழ் ஆர்வத்தை தூண்டும் எனக்கூறினார். மேலும், இந்த விழாவில், நலம்தானா நலம்தானா உடலும் உள்ளமும் நலம்தானா என்ற பாடலையும் பாடினார்.
English Summary:
Chennai: Tamil Nadu Chief Minister's Literary Awards, participated Paneer Selvam, nalamtana nalamtana cocktail singing.