சென்னை: குடியரசு தின விழா கொண்டாட்டங்கள் நடைபெற்ற சென்னை மெரினாவுக்கு அருகே குடியிருந்தும், மகிழ்ச்சியடைய முடியாமல் மீனவ மக்கள் கடும் வேதனையிலும், சோகத்திலும் ஆழ்ந்துள்ளனர். போலீஸ் தாக்குதலால் நிலைகுலைந்து போயிருக்கும் அவர்கள் தற்போது வரை வாழ்வாதாரம் இழந்து தவித்து வருகின்றனர். காவல்துறையின் கடுமையான தாக்குதலுக்குள்ளான நடுக்குப்பம் மீனவ மக்கள் இன்னும் அதிர்ச்சியில் இருந்து மீளவில்லை. காவல்துறையினர் நடத்திய மனிதாபிமானமற்ற, கண்மூடித்தனமான தடியடி ஆங்கிலேயர்கள் போட்ட வெறியாட்டத்தை தங்களுக்கு நினைவுப்படுத்தியதாக கதறுகின்றனர் மீனவ மக்கள்.
காவல்துறையினர் வைத்த தீயில் கடைகளையும், குடியிருப்புகளையும் இழந்து விட்டதாக கண்ணீர் மல்க தெரிவித்த அவர்கள், தங்களது வாழ்வை எப்படி துவக்குவது என தெரியவில்லை என புலம்பி தவிக்கின்றனர். இந்த ஆண்டு குடியரசுதினம் தங்களுக்கு மகிழ்ச்சியை தரவில்லை என அவர்கள் வருத்தம் தெரிவித்தனர். தங்களது குழந்தைகளையும் இந்த குடியரசு தினம் மகிழ்ச்சிப்படுத்தவில்லை என தெரிவித்தனர். இதே போல எரிந்து போன மீன் கடைகளால் துர்நாற்றம் ஏற்பட்டள்ளதாகவும், நோய் தொற்று ஏற்படுவதற்கு முன் இவற்றை அகற்றவும் கோரியுள்ளனர். நாடு முழுவதும் குடியரசு தின கொண்டாட்டங்கள் களை கட்டிய நிலையில், தலைநகர் சென்னை மெரினா கடற்கரைக்கு அருகேயுள் நடுக்குப்பம் மக்கள் தங்களை காப்பாற்ற வேண்டிய காவல்துறையினரால் சூறையாடப்பட்டதால் கடும் மன உளைச்சலில் சிக்கி தவிக்கின்றனர்.
English summary:
Chennai: Republic Day celebrations lived close to the Marina, the fishing can not be happy, people of great suffering, deeply anguished. If the police attack, he would have lost their livelihoods to the present have been languishing. Police have not recovered from the shock yet harsh attack natukkuppam fisherfolk.