பாட்னா : பிரதமர் மோடியின் பாட்னா வருகைக்காக பாதுகாப்பு பலப்படுத்தப்பட்ட நிலையில், பாதுகாப்புப் பணியில் அலட்சியம் காட்டியதாக 23 போலீசார் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
அலட்சியம்:
பீகார் தலைநகர் பாட்னாவுக்கு பிரதமர் மோடி நாளை(ஜன.,5) வருகை தருகிறார். அங்குள்ள காந்தி மைதானத்தில், சீக்கிய மதத் தலைவர் குரு கோவிந்த் சிங்கின் 350-வது பிறந்த நாள் விழா கொண்டாட்டத்தில் கலந்து கொள்கிறார். இதற்காக பாட்னா முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் பாதுகாப்பு பணியில் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பணியிடத்தில் ஆஜராகாத 23 போலீசாரை சஸ்பெண்ட் செய்து காவல்துறை உத்தரவிட்டுள்ளது.
எச்சரிக்கை:
மோடியின் பாட்னா வருகையின் போது தாக்குதல் அச்சுறுத்தலுக்கு வாய்ப்பிருப்பதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. சமீபத்தில் பஞ்சாப் சிறையிலிருந்து தப்பிய காலிஸ்தான் பயங்கரவாதிகள் என்கவுண்டர் செய்யப்பட்டனர். இதனால் சில அமைப்புகள் ஆத்திரமடைந்ததாகவும், இதற்காக விழாவை சீர்குலைக்க திட்டமிட்டிருப்பதாகவும் எச்சரித்தன. இதனையடுத்தே பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டன.
2013ல் குண்டு வெடிப்பு:
முன்னதாக கடந்த 2013ம் ஆண்டு பாட்னா காந்தி மைதானத்தில், பா.ஜ., பிரதமர் வேட்பாளராக மோடியை முன்னிறுத்திய போது நடந்த பொதுக்கூட்டத்தில், மோடி வருகைக்கு சற்று முன்னதாக அங்கு பயங்கர குண்டு வெடித்தது இதில் 5 பேர் பலியானதும், 80 பேர் காயமடைந்ததும் குறிப்பிடத்தக்கது.
English summary:
Patna: Patna, Modi's visit to the fortified position for the defense, security had been ignored in the 23 police have been suspended.