சென்னை: மக்களுக்காவே சட்டம் சட்டத்திற்காக மக்கள் இல்லை என்று நடிகர் ராகவா லாரன்ஸ் சென்னை மெரினாவில் நடைபெற்று வரும் போராட்டத்தில் பேசினார். ஜல்லிக்கட்டுக்கு அவசரச்சட்டம் தேவையில்லை என்றும் அதற்கு நிரந்தரமான தீர்வு வேண்டும் என்று லாரன்ஸ் கோரிக்கை விடுத்துள்ளார். தமிழர்களின் நலனுக்காக சட்டத்தை மாற்றி அமைக்கவும் மெரினாவில் பேசிய லாரன்ஸ் வலியுறுத்தினார். மேலும் இந்த போராட்டத்தில் பல திருநங்கைகள் பலர் போராடியதாகவும், இனி அவர்களை நான் திருநங்கைகள் அழைக்கப்போவதில்லை என்றும் தமிழ்நங்கைகள் என்று அழைக்கப்போவதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும் இதே போராட்டத்தை தொடர வைக்கமாட்டார்கள் என்று அரசுக்கு மறைமுகமாக எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்த போராட்டம் மிகுந்த கண்ணியத்துடனும், நேர்மையுடனும், அறவழியில் போராடி வருவதாக தெரிவித்தார். பீட்டா அமைப்பை இந்தியாவை விட்டு வெளியேற்ற வேண்டும் என்று இளைஞர்களிடம் உறுதியுடன் தெரிவித்தார்.
இனி விவசாயம், கல்வி கட்டண கொள்ளை, உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளுக்கு இளைஞர்கள் போராட தயாராக உள்ளதாக அவர் தெரிவித்தார். ஆனால் அந்த நிலையை அரசு உருவாக்கி தராது என இந்த போராட்டத்தின் எழுச்சி உணர்த்துவதாக தெரிவித்தார். எங்களின் போராட்டத்திற்கு ஆதரவு அளித்த ஊடகம், பத்திரிக்கை நண்பர்களுக்கு நன்றி தெரிவிபப்பதாக தெரிவித்தார்.
English summary:
Chennai: people law that people do not practice law in the ongoing struggle Marina spoke actor Raghava Lawrence. That it was not required to have a permanent solution Jallikattu Lawrence requested the Emergency Law. Speaking to refashion the law for the benefit of Tamils in Marina Lawrence insisted.