அ.தி.மு.க., பொதுச் செயலராக நியமிக்கப்பட்டிருக்கும் சசிகலா, முதல்வர் பன்னீர்செல்வத்தை, அந்தப் பொறுப்பில் இருந்து நீக்கி விட்டு, தன்னை முதல்வராக்கிக் கொள்ள வேண்டும் என, துடித்தார். இதற்காக, தனது உறவுகள் போட்டுக் கொடுத்த திட்டத்தின் படி தொடர்ந்து செயல்பட்டு வந்தார். ஆனால், அந்தத் திட்டங்கள், எதிர்பார்ப்புக்கு மாறாக செல்ல, தனது நடவடிக்கையில், வேகத்தைக் குறைத்தார் சசிகலா. இதை வாய்ப்பாக பயன்படுத்தி, தனது செயல்பாட்டு வேகத்தைக் கூட்டினார் முதல்வர் பன்னீர்செல்வம்.
கூடவே, ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவின், அரசியல் ரீதியிலான நடவடிக்கைகளிலும் வேகம் இருக்க, சசிகலா தரப்பு கொஞ்சம் ஆடிப் போய் உள்ளதாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து, பொங்கல் நாளில், சசிகலா தன் உறவினர்களுடன் கூடி, அடுத்தகட்ட அரசியல் நிகழ்வுகள் குறித்து ஆலோசனை நடத்தியதாகக் கூறப்படுகிறது. அப்போது, ஒரு சிலர், நீங்களே முதல்வராவதை தவிர்த்து விட்டு, டி.டி.வி.தினகரனை முதல்வராக்கலாம். அப்படி செய்தால், அதை பன்னீர்செல்வமே கூட எதிர்க்காமல் இருந்து விடலாம் என கூறியுள்ளனர். ஆனால், அதை சசிகலா உடனடியாக ஏற்றுக் கொள்ளவில்லை என்றும், போயஸ் தோட்டத்து நடவடிக்கைகள் குறித்து நன் கு அறிந்தவர்கள் மூலம் தகவல்கள் வெளியே கசிந்துள்ளன.
இது குறித்து, போயஸ் தோட்டத்து நடவடிக்கைகளை முழுமையாக அறிந்தவர்கள் சிலர் கூறியதாவது:
முதல்வர் பதவியை அடைய வேண்டும் என்ற சசிகலாவின் தீராத வேட்கை, அவ்வளவு எளிதாக இலக்கை அடையும் எனத் தெரியவில்லை. எந்தப் பக்கம் போனாலும், அது சசிகலாவுக்கு இடைஞ்சலாகவே நிற்கிறது. அதனால், தன்னுடைய முதல்வர் ஆசையை, சிறிது காலம் ஒத்தி வைக்க சசிகலாவே முடிவெடுத்து விட்டதாகத் தெரிகிறது.
இருந்தாலும், முதல்வர் பதவியில் பன்னீர்செல்வத்தை தொடர்ந்து இருக்க விடுவதில், சசிகலாவுக்கு விருப்பம் இல்லை. அதனால், அந்தப் பதவியில், தன் உறவுக்காரர்களில் இருந்து யாராவது ஒருவரை நியமித்துவிட வேண்டும் என நினைக்கிறார். இதை தன் உறவினர்கள் சிலரிடம் அவர் லேசுபாசாகச் சொல்ல, பொங்கல் நாளில் கூடிய உறவினர்கள், அது குறித்து பேசியுள்ளனர்.
அப்போது, டி.டி.வி.தினகரனை, புதிய முதவராக்கி விடலாம்; வரும் 27ல் அவரை பதவியேற்க வைக்கலாம் என்றெல்லாம் சிலர் ஆலோசனையாக கூறியுள்ளனர். சசிகலா முதல்வராவதை விட, இது சிறப்பானதாக இருக்கும் என்றும், கட்சிக்காரர்களும் இதை எதிர்ப்பின்றி ஏற்றுக் கொள்வர் என்றும் கூறியுள்ளனர். ஒருசிலர், நடராஜன் பெயரை, முதல்வர் பதவிக்கு உச்சரித்துள்ளனர். அதை சசிகலாவே ஏற்கவில்லை.
தினகரன் குறித்து, தானும் நிறைய யோசிப்பதாகக் கூறியுள்ள சசிகலா, இது குறித்து மேற்கொண்டும் சிலரிடம் தீவிரமாக ஆலோசித்துவிட்டு, தெளிவாக முடிவெடுக்கலாம் என கூறியுள்ளார். இது, தினகரன் தரப்பை உற்சாகப்படுத்தி இருந்தாலும், முதல்வர் பதவியில் அமர்வது குறித்து, தினகரன் குடும்பத்தினர் நிறைய யோசிக்கின்றனராம். அடுத்தடுத்த கட்ட விவாதங்களுக்குப் பின், இந்த விஷயம் மேற்கொண்டு செல்லுமா அல்லது, வேறு திசை நோக்கிப் பயணிக்குமா என்பது தெரியும்.
ஒருவேளை, தினகரன் முதல்வர் என முடிவெடுக்கப்பட்டால், பன்னீர்செல்வம், வழக்கம்போல நிதியமைச்சராகவே தொடருவார்; அவருக்கு, கட்சியில் அவைத் தலைவர் பதவி கொடுக்கப்படலாம். தினகரன், கட்சியின் பொருளாளர் பதவியையும் சேர்த்து கவனிப்பார்.
English summary:
AIADMK general secretary appointed Sasikala, Chief Paneerselvam, removing the charge from the left, and that would be chief minister himself, could not bear to. For this purpose, and also gave her relations had continued according to plan. But the plans go against expectations, in its action, slowing Shashikala. Using this opportunity, convened by Chief Minister Panneerselvam its operational speed.