சென்னை: ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து தமிழகம் முழுவதும் 6-வது நாளாக தொடர்ந்து போராட்டம் நடைபெற்று வருகிறது. அறவழியில் நடைபெற்று வரும் போராட்டத்தை கண்டு உலகமே வியந்து பார்க்கிறது. இந்நிலையில் நமது போராட்டம் வெற்றியடையும் நிலையில் உள்ளதாக ஹிப் ஆப் தமிழா ஆதி தெரிவித்துள்ளார். மேலும் போராட்டம் முடிந்தால் நாம் எப்படி ஒன்று சேர்ந்தோமோ அதே போல் அமைதியாக பிரிய வேண்டும் என்று வேண்டுகோளாக விடுத்துள்ளார்.
நமது வெற்றி கொண்டாட்டத்தில் பொதுமக்களுக்கு எவ்வித பாதிப்பு இல்லாமல் களைய வேண்டும் என்றும், நமது வெற்றியை மட்டுமில்லாமல் நமது கொண்டாட்டத்தையும் சரித்திரம் கொண்டாட வேண்டும் என்று தெரிவித்துள்ளார். தமிழகத்தில் அலங்காநல்லூரில் 6-வது நாளாகவும், சென்னை, மதுரை, நெல்லை, கோவை, உள்பட தமிழகம் முழுவதும் 5-வது நாளாக இளைஞர்கள், பெண்கள் என அனைத்து தரப்பினரும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் தமிழக அரசு அவசர சட்டம் கொண்டு வருகின்றது. இதற்கு மத்திய சட்ட அமைச்சகம், கலாச்சாரத்துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. ஆளுநர் ஒப்புதல் கடிதத்தில் கையெழுத்திட்டால் அவசர சட்டம் அமலுக்கு வரும். வாடி வாசல் திறக்கப்பட்டு காளைகள் சீறிப்பாயும்.
English summary:
Chennai: Tamil Nadu Jallikattu in support of the struggle has been taking place around the 6th consecutive day. Marveling at the world sees the ongoing nonviolent struggle. The success of our struggle to be the position of the hip, said Tamila Gen.