சென்னை - ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையிலிருந்து திறந்துவிடப்பட்ட தண்ணீர், நேற்று காலை தமிழக எல்லையான ஜீரோ பாயிண்ட்டை வந்தடைந்தது.
தமிழக அரசின் வேண்டுகோளினை ஏற்று, ஆந்திர மாநில அரசு, கண்டலேறு அணையிலிருந்து கடந்த சில நாட்களுக்கு முன்னர் தண்ணீர் திறந்துவிட்டது. அணையிலிருந்து திறந்துவிடப்பட்ட தண்ணீர், 152 கிலோ மீட்டர் தூரத்தைக் கடந்து, தமிழக எல்லையான ஜீரோ பாயிண்டிற்கு நேற்று காலை 6 மணியளவில் வந்தடைந்ததாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும், கண்டலேறு தண்ணீர், ஜீரோ பாயிண்டிலிருந்து 25 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள பூண்டி நீர்த்தேக்கத்தை இன்று வந்தடையும் எனவும், சென்னை குடிநீர் தேவைக்காக, புழல் மற்றும் செம்பரப்பாக்கம் நீர்த்தேக்கங்களுக்கு அனுப்பப்பட்டு, நவீன முறையில் சுத்திகரிப்பு செய்யப்பட்ட பின்னர் விநியோகிக்கப்படும் எனவும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
English Summary:
Chennai - opening up the water from the dam kantaleru of Andhra Pradesh, Tamil Nadu territory yesterday morning arrived at Zero Point.