சென்னை : மதுரையில் ஜல்லிக்கட்டு நடத்த முடியாததால் அவர் இன்று சென்னை திரும்பவுள்ளார். அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டதை அடுத்து அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு விளையாட்டை முதல்வர் ஓ.பி.எஸ்., துவக்கி வைப்பதாக இருந்தது. ஆனால் ஓ.பி.எஸ்., வந்தால் அவரை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவோம் என போராட்டக்காரர்கள் தெரிவித்தனர். மேலும் நிரந்தர சட்டம் இயற்றும் வரை நாங்கள் போராட்டத்தை கைவிடுவதில்லை என அறிவித்துள்ளனர். இந்த கிராமத்திற்குள் யாரும் நுழைய முடியாமல் தடைகள் போடப்பட்டுள்ளது.
முதல்வர் ஏமாற்றம்:
இந்நிலையில் மாவட்ட கலெக்டர் வீரராகவராவ், நடத்திய பேச்சு தோல்வியில் முடிந்தது. இருப்பினும் ஜல்லிக்கட்டு பாதுகாப்பு சங்க செயலாளர் மற்றும் முக்கிய நிர்வாகிகளுடன் முதல்வர் ஆலோசனை நடத்தினார். எவ்வித சுமுக முடிவும் ஏற்படவில்லை. இதனையடுத்து மதுரையில் இருந்து முதல்வர் ஓ.பி.எஸ்., சென்னை திரும்பவுள்ளா். இன்று அவர் விமானம் மூலம் சென்னை திரும்புகிறார். தொடர்ந்து கலெக்டர் மற்றும் உயர் அதிகாரிகள் அலங்காநல்லூருக்கு கிளம்பி சென்றனர். இரண்டாவது கட்ட பேச்சு நடத்த திட்டமிட்டுள்ளனர்.
English summary:
Chennai: Chennai return today he could not hold jallikattu in Madurai. The ordinance was issued in Alanganallur jallikattu game ops CM., Was to boot. But ops., Said the protesters would struggle if the besieging him. As we struggle to leave more permanent legislative announced. No one could enter the village, we were not obstacles.