சென்னை: ‛ பிரதமரை சந்தித்து தமிழக பாரம்பரிய உரிமையான ஜல்லிக்கட்டை நடத்த உரிய சட்டத்திருத்தம் மேற்கொள்ள வலியுறுத்துவேன்' என முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் கூறினார்.
பிரதமர் நரேந்திர மோடியை நாளை சந்திப்பதற்காக முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் இன்று இரவு டில்லி புறப்பட்டார்.
முன்னதாக, சென்னை விமான நிலையத்தில் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் அளித்த பேட்டி:பருவமழை பொய்த்து போனதால் ஏற்பட்ட வறட்சிக்கு தேவையான நிவாரணத்தை கேட்டு பெறுவேன். தமிழர்கள் பாரம்பரிய உரிமையான ஜல்லிக்கட்டை நடத்த மத்திய அரசு தலையிட்டு உரிய சட்டத்திருத்தம் மேற்கொள்ள பிரதமரிடம் வலியுறுத்துவேன்.
தமிழர்களின் ஒட்டுமொத்த உணர்வுகளை எடுத்து கூறுவேன். பிரதமர் நாளை காலை 10.30 மணிக்கு சந்திக்க நேரம் ஒதுக்கி உள்ளார். மத்திய அரசுக்கும் மாநில அரசுக்கும் இடையே சுமுக உறவு தொடர்ந்து நீடிப்பதால் நல்ல முடிவு கிடைக்கும் என நம்புகிறேன்.
சற்று நேரத்திற்கு முன், போரட்ட குழுவினரை சந்தித்து அரசின் நடவடிக்கை விளக்கினேன். அது அவர்களுக்கு திருப்தி அளித்திருக்கிறது.இவ்வாறு அவர் பேட்டியில் கூறினார்.
இதை தொடர்ந்து பேட்டியளித்த போராட்டக்குழுவினர் 'முதல்வர் பிரதமரை சந்தித்து பேசினாலும் ஜல்லிக்கட்டு நடக்கும் வரை போரட்டத்தை தொடருவோம். நாளை பல கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால் போராட்டக்களத்தில் இன்னும் ஏராளமான மாணவர்கள் திரள்வார்கள்' என தெரிவித்தனர்.
English summary:
Chennai: Tamil Nadu's traditional right Prime Minister to hold the gravel to make the appropriate amendments to urge that "the chief minister said opanner wealth.