
இடைத்தேர்தலில் சசிகலாவை போட்டியிட வைக்கவும் தீவிரமான ஏற்பாடுகள் நடந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சசிகலாவுக்காக தமிழக அரசின் வருவாய்த்துறை அமைச்சராக உள்ள ஆர்.பி.உதயகுமார் எம்.எல்.ஏ பதவியை துறக்கவும் தயாராக உள்ளதாகவும் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தம்பிதுரை அதிரடிக்கான காரணம்:
அதிமுக-வின் மூத்த நிர்வாகிகள் தம்பிதுரை - ஓ.பி.எஸ் இடையே ஏற்கனவே பனிப்போர் இருந்து வந்தது. அண்மையில் டெல்லி சென்ற ஓ.பி.எஸ்-சுடன் பிரதமரை சந்திக்க தம்பிதுரை முயன்றார். தம்பிதுரையை தவிர்த்த மோடி ஓ.பி.எஸ்-ஸை மட்டும் சந்தித்தார். டெல்லி நிகழ்வு மூலம் தம்பிதுரை - ஓ.பி.எஸ். இடையேயான பனிப்போர் உச்சகட்டத்தை எட்டியது. அதிமுக சார்பில் டெல்லியில் கோலோச்சும் தம்பிதுரை ஓ.பி.எஸ்-ஸை டம்மியாக்க முயல இதுலே காரணம் என கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பதவி விலகுவாரா ஓ.பி.எஸ்?:
தம்பிதுரை மற்றும் சில அமைச்சர்களின் முயற்சியால் ஓ.பி.எஸ் பதவிவிலக வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. எதிர்ப்பு வலுக்கும் பட்சத்தில் வரும் பொங்கலுக்குள் ஓ.பி.எஸ். பதவி விலகுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
போயஸ் கார்டனில் தம்பிதுரை:
சென்னை போயஸ் தோட்ட இல்லத்தில் சசிகலாவை தம்பிதுரை சந்தித்து பேசினார். தம்பிதுரையுடன் அமைச்சர்கள் எடப்பாடி பழனிச்சாமி, உதயகுமாரும் வந்துள்ளனர்.
English Summary:
Chennai: The party - led to one of the civil service must be said that the AIADMK senior executive thambidurai. thambidurai saiskala CM urged to accept responsibility.