சென்னை: ‛ ஜல்லிக்கட்டுக்காக, தமிழக அரசு கொண்டு வந்துள்ள அவசர சட்டம் செல்லுபடியாகும்' என, உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி மார்கண்டேய கட்ஜு கூறியுள்ளார்.
முன்னாள் நீதிபதி மார்கண்டேய கட்ஜு தன், ‛பேஸ்புக்' பக்கத்தில் கூறியிருப்பதாவது:
சில மணி நேரத்திற்கு முன், ‛டிவி' சேனல் விவாதம் ஒன்றை பார்த்தேன். அதில் பேசியவர்கள், ‛ உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக அவசர சட்டத்தை எப்படி கொண்டு வர முடியும்' என,கேள்வி எழுப்பி இருந்தனர். எனவே, இந்த விஷயத்தில் சட்ட நிலையை நான் விளக்க உள்ளேன். ஒரு சட்டம் அல்லது அவசர சட்டம்( இரண்டும் ஒரே மாதியான சட்ட அங்கீகாரம் பெற்றவை தான்.. சட்டசபை அல்லது பார்லிமென்ட் கூட்டம் நடக்காத போது கொண்டு வரப்படுவது தான் அவசர சட்டம் என்ற ஒரே வித்தியாசம் தான் உள்ளது) நேரடியாக, நீதிமன்ற தீர்ப்பை செல்லாது என்று சொல்லாது. எனினும், ஒரு சட்டம் அல்லது அவசர சட்டம், மூலம்நீ திமன்றம் எந்த சட்டத்தை அடிப்படையாக வைத்து முடிவை எடுத்ததோ அந்த சட்டத்தை திருத்தவோ, செல்லாதபடியாக்கவோ முடியும். ஜல்லிக்கட்டு தொடர்பாக, ஜனாதிபதி பிறப்பிக்க உள்ள அவசர சட்டம், ஜல்லிக்கட்டுக்கு தடை விதித்து உச்சநீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்பை நேரடியாக செல்லாது என்று கூறாது.
ஆனால், அந்த அவசர சட்டம், விலங்குகள் துன்புறுத்தல் தடை சட்டத்தில் திருத்தம் செய்யும். அதாவது, ஜல்லிக்கட்டு நடத்த அனுமதிக்கலாம் என அவசர சட்டம் கூறும். இதன்படி, உச்சநீதிமன்ற தீர்ப்பை செல்லாது என அவசர சட்டம் சொல்லாது. ஆனால், எந்த சட்டத்தின் அடிப்படையில் உச்சநீதிமன்றம் தீர்ப்பை பிறப்பித்ததோ, அந்த சட்டத்தின் அடிப்படையை அவசர சட்டம் மாற்றி விடும். அதன்மூலம், ஜல்லிக்கட்டு விஷயத்தில் அந்த சட்டத்தின் அடிப்படை நீர்த்து போகும்.
இவ்வாறு மார்கண்டேய கட்ஜு கூறியுள்ளார்.
English summary:
Chennai: 'Jallikattu, the government has brought the ordinance valid', as former Supreme Court Justice Katju said firs. Katju, a former judge in his firs, 'Facebook' page reads: