புதுடில்லி : பிரதமரின் ‛டிகிரி' குறித்த ஆர்.டி.ஐ., கேள்விக்கு தகவல் அளிக்க மறுத்த டில்லி பல்கலை., அதிகாரிக்கு ரூ.25,000 அபராதம் விதித்து மத்திய தகவல் ஆணையம் உத்தரவிட்டது.
ஆர்.டி.ஐ., கேள்வி:
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பிரதமர் நரேந்திர மோடியின் பட்டப் படிப்பு தகுதி குறித்த தகவல்களை தரும்படி முகமது இர்ஸாத் என்ற டில்லியை சேர்ந்த வக்கீல் விண்ணப்பித்திருந்தார். இதனை டில்லி பல்கலை., தலைமை தகவல் அதிகாரி மீனாட்சி சஹாய் நிராகரித்தார். இதுகுறித்து இர்ஸாத், மத்திய தகவல் ஆணையர் அலுவலகத்தில் மேல்முறையீடு செய்தார்.
இதனை விசாரித்த தகவல் ஆணையர் பிறப்பித்த உத்தரவு:
போஸ்டல் ஆர்டரில் பதிவாளர் பெயர் இல்லை எனக்கூறி தகவல் தர மறுத்த அதிகாரியின் செயல் கண்டிக்கத்தக்கது. தனது அலட்சியத்தை மறைக்க அவர் பொய் கூறியுள்ளது விசாரணையில் தெரிய வந்துள்ளது. தகவல் உரிமை சட்டப்படி கோரிய தகவலை நிராகரித்த அவருக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கிறேன். மேலும் அவருக்கு தகவல் உரிமைச் சட்டத்தின் சரத்துகள், நிர்வாகச் சட்டங்கள் தொடர்புடைய பயிற்சியை அளிக்க அரசுத் துறைக்கு உத்தரவிடுகிறேன். இவ்வாறு அவர் தனது உத்தரவில் தெரிவித்தார்.
English summary:
NEW DELHI: Prime Minister of the 'degrees' of the artiai, University of Delhi has refused to provide the information in question., The officer ordered the Federal Communications Commission imposed a fine of Rs 25,00