
விடுதலை:
எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கைது செய்யப்பட்டிருந்த இந்திய மீனவர்கள் 439 பேரை, விடுவிக்க பாக்., அரசு முடிவு செய்தது. முதற்கட்டமாக கடந்த டிச.,25ம் தேதி பாகிஸ்தானின் மலிர் சிறையில் அடைக்கப்பட்டிருந்த 220 இந்திய மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டனர். இந்நிலையில் நேற்று (ஜன.,5) மேலும் 218 இந்திய மீனவர்களை நல்லெண்ண அடிப்படையில் பாக்., விடுதலை செய்தது. அவர்கள் ரயில் மூலம் லாகூர் அழைத்து செல்லப்பட உள்ளனர். அங்கிருந்து வாகா எல்லையில் இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படுவார்கள்.
438 மீனவர்கள் :
கடந்த 10 நாட்களில் மட்டும் 438 இந்திய மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். மாரடைப்பால் மீனவர் ஒருவர் சிறையில் காலமானதாக பாக்., அரசு தெரிவித்துள்ளது. யூரி தாக்குதல் தொடர்ந்து இரு நாடுகளுக்கு இடையிலான உறவில் பதற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், இந்திய மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
English summary:
KARACHI: In a goodwill gesture, Pakistan frees Indian fishermen imprisoned 218